Posts

Showing posts from 2023

அக்னிச்சிறகுகள் : எ.பி.ஜெ.அப்துல் கலாம், அருண் திவாரி

Image
  அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள்  (தமிழில் மு.சிவலிங்கம்) படித்தேன் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. ஏவுகணைகளை எப்படி செய்கிறார்கள் எனவும், அதில் அனைவருக்கும் புரியும்படியாகவும், சுலபமாகவும் இருக்கிறது. இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் மு. சிவலிங்கம்.  அப்துல் கலாம் பாசமிக்கவர், ஒரு மேதை, ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்லைவர், ஏவுகணையின் தலைவன், வேலையில் கவனமாக இருப்பவர், அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றும் நிலைந்திருக்கும். மாணவர் சமுதாயத்தை கனவுகாணுங்கள் என்றவர். அவரது பிறந்த நாளான இன்று (15 அக்டோபர் 2023) அவருடைய புத்தகத்திலிருந்து  சிலவற்றை நினைவு கூறுகிறேன்.     " விமானப்படை விமானியாக வேண்டும் என்ற என்னுடைய கனவு, நான் கலெக்டராக வேண்டும் என்ற என் அப்பாவின் கனவெல்லாம் நனவாகாமல் போய் நான் ராக்கெட் என்ஜினியரான கதையைச் சொல்லலாமே என்று தோன்றியது. எனக்கு அறிவாற்றலையும், உத்வேகத்தையும் தந்த புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகளுக்கு நான்மிகவும் கடமைப்பட்டிருக்கறேன். இவர்களில் விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், பிரம்பிரகாஷ் ஆகியோரும் அடக்கம். எனது வாழ்க்கையிலும் இந்திய வரலாற்றிலும் இந்த வ

அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்

Image
          அண்மையில் எங்கள் பேரன் தமிழழகன், எங்கள் வீட்டிலிருந்த ஒரு சில்வர் சம்படத்தைப் பார்த்து, "இதில் எதற்காக பெயர் எழுதியிருக்கிறது?" என்று கேட்டான். திருமணத்திற்குப் பிறகு வாங்கிய அந்த சம்படத்தில் என் பெயரைக் குறிக்கும் வகையில் ஆங்கில இனிஷியல் எழுத்துக்களான  ஜே.பி. என்றிருந்தது. அப்போது அவனிடம், "அப்போதெல்லாம் அன்பளிப்பு தரும் பொருள்களில், கையில் மிகச்சிறிய உளியைக்கொண்டு பெயரை வெட்டித்தருவார்கள். ஒரு எழுத்துக்கு இத்தனை பைசா என வாங்குவார்கள். சில சமயங்களில் முழுப்பெயரும் போடுவர். முன்னும் பின்னும் சிறிய டிசைனோ, பூவோ போட்டுத்தருவார்கள். காலப்போக்கில் பெயர் வெட்டித்தரவும் மிஷின் வந்துவிட்டது" என்றேன்.     அவன் கேட்ட கேள்வி என்னை  ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றுவிட்டது. அப்போது நான்  திருமண விழாக்களுக்கு அம்மாவுடன் சென்றிருக்கிறேன். குடம், தவலை, செப்புப்பானை, அண்டா, குண்டான்சட்டி, இட்லி பானை, குத்துவிளக்கு, குவளை, கூஜா, சாப்பாட்டு கேரியர் போன்றவற்றை அன்பளிப்பாக மணமக்களுக்கு தருவார்கள். அவை பெரும்பாலும் பித்தளையிலும்  எவர்சில்வரிலும் இருக்கும். அதில் அ

மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை

Image
எங்கள் இல்ல நூலகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை   நூலைப் படிக்க எடுத்துப்பார்த்தபோது எழுத்து சிறியதாக இருந்ததால் படிக்க சற்று யோசித்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். 605 பக்கங்களைக் கொண்ட இந்நூலைப் படிக்க சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எதை சொல்வது, எதைவிடுவது எனத் தெரியவில்லை. அவர் பிறந்த நாளில் அந்நூலிலிருந்து  சிலவற்றை நினைவு கூறுகிறேன்.     "எங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று நான் பம்பாய்க்குப் புறப்பட்டேன். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் என் மனைவியை விட்டுவிட்டு என் தாயாரின் அனுமதியையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு நான் குதூகலமாகப் பம்பாய்க்குப் புறப்பட்டேன்....ஜாதி நாட்டாண்மைக்காரரான சேத் எனக்குத் தூர பந்து. என் தந்தையாருக்கு மிகவும் வேண்டியவராய் இருந்தார். என்னைப் பார்த்து அவர் பின்வருமாறு கூறினார். 'இங்கிலாந்துக்குப் போவதென்று நீ ஏற்பாடு செய்திருப்பது சரியல்ல என்பது நம் சாதியினரின் அபிப்பிராயம். வெளிநாடுகளுக்குக் கப்பல் பிராயணம் செய்வதை நம் மதம் அனுமதிக்கவில்லை. நம் மத தருமங்களை கைவிடாமல் அங்

அமர்நாத் யாத்திரை

Image
என் சகோதரிகளின் குடும்பத்தார் ஜூலை 2023இல் அமர்நாத் செல்லத் திட்டமிட்டிருந்தபோது, அதற்கு முன்னர் நான் நாளிதழில் படித்த செய்தி நினைவிற்கு வந்தது.  "தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத்தில்  3,880 மீட்டர் உயரத்தில் ஆண்டுதோறும் இயற்கையாக பனிலிங்கம் உருவாகிறது. இந்த லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். 62 நாள்களுக்கு நீடிக்கவுள்ள  அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் சனிக்கிழமை (1.7.2023) முறைப்படி தொடங்குகிறது. 48 கி,மீ நீளம் நுன்வான்/பஹல்காம் பாதையிலும் கந்தர்மால்  மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. நீளம் பால்டால் பாதையிலும் யாத்திரை நடைபெற உள்ளது." (நன்றி : தினமணி,  1.7.2023) சுற்றுலா செல்வது யாவருக்கும் பிடித்த ஒன்று. தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா கோயில்கள் இருக்கின்றன. நான் தமிழ்நாட்டிற்கு வெளியில் முதலில் சென்றது மந்த்ராலயம். அடுத்து காசி, மைசூர், பேலூர், ஹலேபேட், சோம்நாத்பூர் போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளேன்.  இந்த வருடம் என் சகோதரிகளின் குடும்பத்தார் பஞ்சாபில் பொற்கோயில், வாகா பார்டர், ஜாலியன்வாலாபாக் நினைவுச்சின்னம், அமர்நாத் பனி லிங்கம்,  ஜம்மு-காஷ்மீரில

வாழ்த்துக்கள், செல்வராணி சரவணன்

Image
இன்று  (2.8.2023) சென்னை வானொலி நிலைய விவித்பாரதி   எப்.எம்.இல் (Vividh Bharati தமிழ் FM 102.3) சென்னை பேஷன் இன்ஸ்டிடியூட்டின் உரிமையாளர் திருமதி. ச. செல்வராணி சரவணன் சிறப்பாக உரையாடினார். அவருடைய 15 வருட அனுபவத்தைப் பகிர்ந்த விதம் சிறப்பாக இருந்தது.  அவர் என் அண்ணனின் (திரு.தி.ராமமூர்த்தி-திருமதி.ரா.கண்மணி) மூத்த மகள் செல்வராணி. அவர் சிறுவயதிலேயே சுறுசுறுப்புடன் இருப்பார். கைத்தொழில் கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருபவர். உல்லன் நூலில் அவர் பின்னுவது மிக அழகாகவும், ஒன்று போலவும் காணப்படும். திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் குடியேறிய அவர் சிறுவயதில் தான் கற்றுக்கொண்ட கலையைத் தொடர ஆரம்பித்தார். அவரது  தையற்கலை இன்று பலருக்குப் பயன்படுகிறது. அவர் புரியும்படி சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்.  நான் அவரிடம்தான் உல்லனில் நிலத்திரையையும், அதில் தொங்குகின்ற பொம்மையையும், கண்ணடியாலான டியூபில் ஒரு கூடை பின்னவும்  கற்றுக்கொண்டேன்.  வீட்டில் ராணி என்று அழைப்போம். அவரது கணவர் செல்வா என அழைப்பார்.  அவருடைய அம்மாவின் ஊக்கமும், கணவரின் உந்துதலும், அவருடைய விடாமுயற்சிக்குத் துணையாக அமைந்தன.  இன்

சிவகங்கைப்பூங்கா

Image
நேற்றைய நாளிதழில் வெளியான (நான்கு ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவகங்கை பூங்கா, தினமணி, 2 ஏப்ரல் 2023, பக்கம் 3) கட்டுரையைப் படித்ததும்  50 ஆண்டுகளுக்கு முன் நான் முதன் முறையாகவும், பின்னர் அவ்வப்போது சென்றதும் நினைவிற்கு வந்தது.  அச்செய்தி மூலமாக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகிலுள்ள இந்தப் பூங்கா, மாமன்னன் ராஜராஜசோழனால் உருவாக்கப்பட்ட சிவகங்கைக்குளத்தைச் சுற்றி பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1871-72ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதை அறிந்தேன். பூங்காவில்  பா. தமிழழகன் தஞ்சாவூரில் உள்ள முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சிவகங்கைப்பூங்கா தஞ்சாவூரில் இருப்பவர்களுக்கு ஒரு அழகிய பொழுதுபோக்கான இடமாகும்.  வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் தஞ்சைப் பெருவுடையார் கோயில், அரண்மனை மற்றும் இப்பூங்காவிற்கு அழைத்துச் செல்வோம். சுற்றுலாவிற்கு வருபவர்களும் இங்கு வந்துசெல்வதைப் பார்த்துள்ளேன்.  பூங்காவில் நெட்லிங்க மரங்கள், ஆல மரங்கள், வேப்ப மரங்கள் என பலவகையான மரங்கள், பறவைகள், விலங்குகளைப் பார்க்கலாம். குறிப்பாக அங்குள்ள புனுகுப்பூனையை வருபவர்கள் அனைவரும் அதிசயமாகப் பார்ப்பார்கள். பூங்காவ

அண்ணன் செல்வராஜ் (50ஆம் ஆண்டு நினைவு நாள்)

Image
பெரும்பாலான வணிகர்கள் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். இது வழக்கமாக செய்வார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவும் அண்ணன்களும் புதுக்கணக்கு போடுவதற்காகக் கடைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். அன்று என் செல்வராஜ் அண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திவிட்டார். அண்ணனை செல்லமாக ராசாப்பயல் என்று வீட்டில் அழைப்பார்கள். எங்கள் வீட்டார் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் என்றாலே அண்ணனின் நினைவுகள் அனைவருடைய மனதிற்கும் வந்துவிடும். இறந்த அண்ணனுக்காக அப்போது அப்பா ஆசைப்பட்டு சமாதி கட்டினார். அம்மா, அப்பாவின் மறைவிற்குப் பிறகு செல்வராஜ் அண்ணனுக்கு அண்ணன்களும், தம்பியும் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெண் பிள்ளைகளான நாங்களும் அதில் கலந்துகொள்வோம்.  எங்கள் பெற்றோரின் (திரு. திருவண்ணாமலை நாடார்-திருமதி தில்லையம்மாள்) மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள் எல்லாம் நினைப்பதைவிட பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் என அனைவரும் ஏப்ரல் மாதம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அண்ணனை நினைத்துக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்கள். சாமி கும்பிடும்போது அவர்கள

அமராவதி அத்தை

Image
எங்கள் அப்பாவினுடைய தாய்மாமாவின் மருமகள் அமராவதி அத்தை. அவர் குறிச்சித்தெருவில் எங்கள் வீட்டில்  குடியிருந்தார்கள். நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபொமுது எங்களுக்குத் தலை பின்னிவிடுவது, ஆற்றில் எங்களைக்  குளிப்பாட்டும் பொழுது  இறுக்கமாகப் பிடிக்கச் சொல்லி தலையை தண்ணீரில் முக்கி அலசிவிடுவது, சினிமாவுக்கு போகும்போது எங்களைத் தூக்கிக்கொள்வது, தலைமுடியை சிலுப்பாமல் மறுநாள் வரை அப்படியே இருக்குமாறு அழுத்திப்பின்னுவது என்று அவர்கள் எங்கள்மீது செலுத்திய அன்பானது இன்றும் நினைவில் நிற்கிறது.   கடைக்கு மாமா சென்றபின்  வீட்டிலேயே அத்தை சவ்வு மிட்டாய்  போடுவார்கள். அது ருசியாக இருக்கும்.  பள்ளிக்குச் செல்லும்போது மிட்டாய் வாங்க அம்மாவிடம் ஐந்து பைசா வாங்கிக்கொண்டுபோவோம். மாமா இருந்தால் எங்களுக்கு ஐந்து பைசாவுக்கு ஆறு மிட்டாய் தருவார். ஆனால் அத்தையோ ஐந்து பைசாவுக்கு ஐந்து மிட்டாய்தான் தருவார்கள். கரெக்டாக இருப்பார்கள். நாங்கள் அவர்கள் கொடுப்பதை வாங்கிவருவோம். என்னதான் வீட்டிலே தீனி தின்றாலும் அத்தை மிட்டாயை விடமாட்டீர்களே என்று அம்மா கூறுவார்கள். அவர்களுக்கு எங்கள்மீது அதிகம் பாசம் உண்டு.  எங்கள் வீட

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்

Image
         தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உதிரமாடன்குடியிருப்பில் உள்ள சாஸ்தா செண்பக கூத்தய்யன் கோயிலின் குடமுமுக்கு 12 செப்டம்பர் 2022, ஆவணி 27ஆம் நாளன்று சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவிற்கு குடும்பத்தாருடன் சென்றோம். குடமுழுக்கு நாளில் மூலவர் கோயிலின் பின்புறம் வலது பக்கத்தில் மகாதேவர் சன்னதி கோயிலின் எதிரில் உள்ள  சன்னதி இக்கோயில் இப்போது கருவறை, முன் மண்டபம், விமானம் ஆகியவற்றோடு உள்ளது. செண்பக கூத்தய்யன் என்று அழைக்கப்படும் செம்புகுத்தி அய்யனார் கருவறையில் அமர்ந்த நிலையில் பூர்ண புஷ்கலையுடன் உள்ளார்.  கருவறையின் முன்பாக வலது புறத்தில் பிரம்ம சக்தியம்மன் உள்ளார். மூலவருக்கு எதிராக முன் மண்டபத்தில் பலிபீடம், அதற்கு கீழ் யானை, குதிரை, நாய் ஆகியவை உள்ளன. கருவறையின் மேல் அழகிய விமானம் உள்ளது. முன்மண்டபத்தின் முன்பாக வலது புறத்தில் சுடலைமாடன், பேச்சியம்மன், இசக்கியம்மன், தளவாய்மாடன், மாடத்தி ஆகியோரும் இடது புறத்தில் முண்டனும் உள்ளனர். மூலவர் சன்னதியின் வெளியில் வலப்புறத்தில் மகாகணபதி சன்னதி உள்ளது. இவ்விரு சன்னதிகளுக்கும் பின்புறத்தில் சற்று தூரத்தில் குரு, மகாதேவர், மகாதேவ