Posts

Showing posts from October, 2023

அக்னிச்சிறகுகள் : எ.பி.ஜெ.அப்துல் கலாம், அருண் திவாரி

Image
  அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள்  (தமிழில் மு.சிவலிங்கம்) படித்தேன் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. ஏவுகணைகளை எப்படி செய்கிறார்கள் எனவும், அதில் அனைவருக்கும் புரியும்படியாகவும், சுலபமாகவும் இருக்கிறது. இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் மு. சிவலிங்கம்.  அப்துல் கலாம் பாசமிக்கவர், ஒரு மேதை, ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்லைவர், ஏவுகணையின் தலைவன், வேலையில் கவனமாக இருப்பவர், அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றும் நிலைந்திருக்கும். மாணவர் சமுதாயத்தை கனவுகாணுங்கள் என்றவர். அவரது பிறந்த நாளான இன்று (15 அக்டோபர் 2023) அவருடைய புத்தகத்திலிருந்து  சிலவற்றை நினைவு கூறுகிறேன்.     " விமானப்படை விமானியாக வேண்டும் என்ற என்னுடைய கனவு, நான் கலெக்டராக வேண்டும் என்ற என் அப்பாவின் கனவெல்லாம் நனவாகாமல் போய் நான் ராக்கெட் என்ஜினியரான கதையைச் சொல்லலாமே என்று தோன்றியது. எனக்கு அறிவாற்றலையும், உத்வேகத்தையும் தந்த புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகளுக்கு நான்மிகவும் கடமைப்பட்டிருக்கறேன். இவர்களில் விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், பிரம்பிரகாஷ் ஆகியோரும் அடக்கம். எனது வாழ்க்கையிலும் இந்திய வரலாற்றிலும் இந்த வ

அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்

Image
          அண்மையில் எங்கள் பேரன் தமிழழகன், எங்கள் வீட்டிலிருந்த ஒரு சில்வர் சம்படத்தைப் பார்த்து, "இதில் எதற்காக பெயர் எழுதியிருக்கிறது?" என்று கேட்டான். திருமணத்திற்குப் பிறகு வாங்கிய அந்த சம்படத்தில் என் பெயரைக் குறிக்கும் வகையில் ஆங்கில இனிஷியல் எழுத்துக்களான  ஜே.பி. என்றிருந்தது. அப்போது அவனிடம், "அப்போதெல்லாம் அன்பளிப்பு தரும் பொருள்களில், கையில் மிகச்சிறிய உளியைக்கொண்டு பெயரை வெட்டித்தருவார்கள். ஒரு எழுத்துக்கு இத்தனை பைசா என வாங்குவார்கள். சில சமயங்களில் முழுப்பெயரும் போடுவர். முன்னும் பின்னும் சிறிய டிசைனோ, பூவோ போட்டுத்தருவார்கள். காலப்போக்கில் பெயர் வெட்டித்தரவும் மிஷின் வந்துவிட்டது" என்றேன்.     அவன் கேட்ட கேள்வி என்னை  ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றுவிட்டது. அப்போது நான்  திருமண விழாக்களுக்கு அம்மாவுடன் சென்றிருக்கிறேன். குடம், தவலை, செப்புப்பானை, அண்டா, குண்டான்சட்டி, இட்லி பானை, குத்துவிளக்கு, குவளை, கூஜா, சாப்பாட்டு கேரியர் போன்றவற்றை அன்பளிப்பாக மணமக்களுக்கு தருவார்கள். அவை பெரும்பாலும் பித்தளையிலும்  எவர்சில்வரிலும் இருக்கும். அதில் அ

மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை

Image
எங்கள் இல்ல நூலகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை   நூலைப் படிக்க எடுத்துப்பார்த்தபோது எழுத்து சிறியதாக இருந்ததால் படிக்க சற்று யோசித்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். 605 பக்கங்களைக் கொண்ட இந்நூலைப் படிக்க சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எதை சொல்வது, எதைவிடுவது எனத் தெரியவில்லை. அவர் பிறந்த நாளில் அந்நூலிலிருந்து  சிலவற்றை நினைவு கூறுகிறேன்.     "எங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று நான் பம்பாய்க்குப் புறப்பட்டேன். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் என் மனைவியை விட்டுவிட்டு என் தாயாரின் அனுமதியையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு நான் குதூகலமாகப் பம்பாய்க்குப் புறப்பட்டேன்....ஜாதி நாட்டாண்மைக்காரரான சேத் எனக்குத் தூர பந்து. என் தந்தையாருக்கு மிகவும் வேண்டியவராய் இருந்தார். என்னைப் பார்த்து அவர் பின்வருமாறு கூறினார். 'இங்கிலாந்துக்குப் போவதென்று நீ ஏற்பாடு செய்திருப்பது சரியல்ல என்பது நம் சாதியினரின் அபிப்பிராயம். வெளிநாடுகளுக்குக் கப்பல் பிராயணம் செய்வதை நம் மதம் அனுமதிக்கவில்லை. நம் மத தருமங்களை கைவிடாமல் அங்