Posts

Showing posts from 2021

செட்டியாபத்து ஐந்துவீட்டுசுவாமி கோயில்

Image
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உடன்குடி அருகில் உள்ள செட்டியாபத்து என்னுமிடத்தில் அருள்மிகு ஐந்துவீட்டுசுவாமி கோயில் உள்ளது . இக்கோயில் எங்கள்  அக்கா வீட்டு  (பொன்மதி)  குலதெய்வமாகும். இக்கோயிலுக்கு மே 2019இல்  அக்காவின் குடும்பத்தாருடன் சென்றேன். கோயிலுக்குச் சென்ற நினைவுகள்... இக் கோயிலின் வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் எல்லாம்வல்ல பெரிய பெருமாள் அருள்மிகு பெரியசுவாமியாக  உ ள்ளார் .  கோயில் வளாகத்தில் வயணப்பெருமாள் , அனந்தம்மாள் , ஆத்திசுவாமி , திருப்புளி ஆழ்வார் , பெரியபிராட்டி அம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன . மேலும் ஆஞ்சநேயர் சன்னதியும் , குதிரை சாமியும் உள்ளன . கோயில் நான்கு பக்கமும் மதில் சுவர்களுடன் கூடிய ஓரிடத்தில் ஆறு தெய்வங்களுக்கு ஐந்து தனித்தனி சன்னதிகள் வழிபட்டு வருவதால் அருள்மிகு ஐந்துவீட்டுசுவாமி எனப் பெயர் பெற்றுள்ளது . சன்னதிகளில் உள்ள தெய்வங்களில் பெரியசுவாமி தவிர அனைத்திலும் மூலவருக்கு விக்கிரகங்கள் கிடையாது . பக்தர்கள் கருவறை வரை சென்று தெய்வங்களைத் தொட்டு வழிபடும் வழக்கமும் ,