Posts

Showing posts from March, 2016

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

அந்நாளில் தட்டச்சும் சுருக்கெழுத்தும் தற்போது எட்டாம் வகுப்புக்குமேல் படித்துவிட்டு உயர் நிலைப்பள்ளி போனதும் படிக்க நேரம் இல்லை என்று சொல்கிறார்கள். 1970க்கு முன்பு எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் ஆசிரியர் வேலை, வங்கிகளில் வேலை வாய்ப்புக்கும் இந்த தட்டச்சு உதவியாக இருந்தது. இன்று மாணவ மாணவிகள் ஒரு பட்டம் வாங்கியவுடன் வேறு எதுவும் வேண்டாம் என்று இருக்கிறார்கள். படிப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அன்று தட்டச்சு, சுருக்கெழுத்து தெரிந்தால் தான் வேலை வாய்ப்புகள் அமையும். இப்போதும் அதன் முக்கியத்துவத்தை நாம் சற்றுச் சிந்திப்போம்.  தட்டச்சுப்பொறியின் பயன்பாடு கணினியின் வரவால் தட்டச்சுப் பொறிகள் விலைக்கு விற்கப்பட்டு, பயன்பாடு இல்லாமல் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆங்காங்கு இருக்கும் ஒரு சில தட்டச்சுப்பொறிகள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்ற தட்டச்சு சுருக்கெழுத்து நிலையங்களில் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசுத்தேர்வு எழுத மட்டும் இவை பயன்படுத்தப்படுகின்றன. நாளடைவில் இதுவும் குறைந்துவிடும் நிலை எழ வாய்ப்புள்ளது.  கணினி மூலம் தட்டச்சு கணினியின் மூலமாக கணினி