Posts

Showing posts from 2022

மச்சான் முருகேசபாண்டியன் (1943-2021)

Image
இன்று  (10 ஜூன் 2022) எங்கள் மச்சான் திரு . வி . முருகேசபாண்டியன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு நாள் . அருப்புக்கோட்டை அருகில் கல்லூரணியில் 3 மே 1943 இல் பிறந்தார் . அவருடைய பெற்றோர் திரு . சி . விநாயகமூர்த்தி - திரு . வி . சேர்மதி . அவர் உடன்பிறந்தவர் ஒரு தம்பி , திரு . வி . ரத்தினபாண்டியன் .   மச்சானின் ஏழாம் வயதில்   பெற்றோர் இறந்துவிட , தஞ்சாவூரில் தாய் மாமா திரு . மு . திருவண்ணாமலை நாடார் ( எங்கள் அப்பா ) வீட்டில் வளர்ந்தார் . தூய பேதுரு மேல்நிலைப்பள்ளியில் எஸ் . எஸ் . எல் . சி . முடித்தார் . 25 பேர் தேர்வு எழுதியதில் நான்கு பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள் . அவர்களில் மச்சானும் ஒருவர் . தொடர்ந்து படிக்க ஆசைப்பட்ட போதிலும் போதிய வசதி இல்லாததால் மேல் படிக்க முடியவில்லை . பிறகு தட்டச்சும் ,   சுருக்கெழுத்தும் கற்றார் . பூண்டியிலிருந்து வந்த கேசவமூர்த்தி என்பவர் எங்கள் அப்பாவிடம் தான் சிவகாசியில் ஒரு கல்லூரிக்கு வேலைக்குப் போவதாகக் கூறியபோது , எங்கள் அப்பா அவரிடம் “ அக்கா பையன் படித்துவிட்டு இருக்கிறான் . நீங்கள் போனதும் அங்கு வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் ” என்று கூறியுள்ளா

திரு திருமூர்த்தி பணி நிறைவு (31 மே 2022)

Image
இன்று பணிநிறைவு பெறும் என் தங்கை தி.தமிழ்ச்செல்வியின் கணவர் திரு. த.   திருமூர்த்தி அவர்களுக்கு என் சார்பாகவும், எங்கள் குடும்பம் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு த.திருமூர்த்தி (பி.1962) அவர்களின் பெற்றோர் (நினைவில் வாழும்)  திரு .  ப . தங்கையன்   நாடார் - திரு மதி.  தி . ராஜம்மாள் .  த ந்தை கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  ஆசிரிய ராகப் பணியாற்றியவர். தாயார்  இல்லதரசி . அவருக்கு உடன்பிறந்தோர் ஒரு அண்ணன் மற்றும்  ஒரு தங்கை. அவருடைய மனைவி (என்னுடைய தங்கை)  திருமதி தி . தமிழ்ச்செல்வி . மூத்த மகன்  திரு . தி . ரஞ்சித்குமார்  ( மருமகள் ர .  பூஜா ,  இரண்டு பேரன்கள் ஹர்ஷிவ், ஹிரித்விக் ) இளைய  மகன் செல்வன் தி.   திலக் . மகன்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.  அவர், தான் பணிக்கு வந்த சூழலை அவர் பின்வருமாறு கூறினார். “எனக்கு பி . எஸ் . சி ., இரண்டாம் வருடம் படித்துக்கொண் டிருந்தபோது அரசுத்துறையில் தகுதி அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி (1990) கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிடைத் த து . இது எனக்கு பிடித்தமான வேலை ,  

அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி : 9ஆம் வகுப்பு

Image
எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள் முடிந்தவுடன்  டி.சி. வாங்குவதற்காக நான் என் தோழிகளுடன் பள்ளிக்குச் சென்றேன். தலைமையாசிரியரிடம் டி.சி.யை பெற்றபின் எந்தப் பள்ளியில் சேரலாம் என முடிவு செய்து வீட்டிற்கு வந்துவிட்டோம். தோழிகளுடன் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசினர்  மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேரப்போகிறோம் என அம்மாவிடம் கூறினேன். நடந்து செல்வதற்குக் கஷ்டமாக இருக்குமே என்று அம்மா சொன்னபோது மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்வோம் என்றேன். பள்ளியின் நுழைவாயில் டி.சி. வாங்கிய ஒரு வாரத்திற்குள் ஜெயலெட்சுமி, சுபா, ஜாக்குலின், அனுசியா, தமிழ்ச்செல்வி ஆகிய தோழிகளுடன் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ( 1978-79)   சேர்ந்தேன். சிலருடைய பெயர் நினைவில் இல்லை. முதலில் நடந்து செல்வதற்குச் சிரமமாக இருந்தது. பிறகு பழகிக்கொண்டேன். ஒன்பதாம் வகுப்பறையில்  அமர்வதற்கு இருவர் அமரும் வகையில் மேஜையுடன்கூடிய இருக்கை இருந்தது. அதில் புத்தகங்களையும், நோட்டுகளையும்  வைத்து பூட்டிவைத்துக் கொள்ளலாம். இது எனக்குப் புதிதாக இருந்தது. ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி, மாலை நான்கரை மணிக்குள்

73 ஆம் ஆண்டு குடியரசு தினம்

Image
எங்கள் வீட்டில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடியேற்றும் வழக்கம் உள்ளது. முன்பு மகன்கள் அப்பாவுடன் சேர்ந்து கொடியேற்றுவார்கள். அவர்கள் வேலைக்குச் சென்ற பிறகு நாங்கள் இருவரும் ஏற்றிவருகிறோம். பேரன்கள் ஊரில் இருந்தால் கலந்துக் கொள்வார்கள். ஒரு முறை எங்கள் பெரிய அக்காவின் பேத்திகள் பிரீத்தி, பிரியசகி வந்தார்கள். இளைய மகன் திருமணத்தின் முதல் நாள் குடியரசு தினம். அன்று வீட்டில் உறவினர்களுடன், மன்னார்குடி அக்கா பேத்திகள் அக்ஷரா, தக்ஷனா, பேரன்கள் தமிழழகன், தமிழமுதன் ஆகியோருடன் ஏற்றினோம்.   எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடும்பம் உள்ளது. அவர்களுடைய பேத்திகளான, பள்ளி மாணவிகளான ஸோபியாவும், பாவனாவும் அவர்களுடைய ஆத்தா, தாத்தா பழக்கம் காரணமாக எங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஸோபியா நன்றாக இந்தி பேசும். பட்டியாலாவில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படித்தது. பிறகு தஞ்சாவூர் வந்துவிட்டார்கள். ஸோபியா   நன்றாக ஓவியம் வரையும். ஆங்கிலத்தில் வார்த்தைகள் வந்து கேட்டு படித்துச் செல்லும். கொரானா காலம் என்பதால் வீட்டில் வந்து படிப்பது குறைந்துவிட்ட

ஓவியனின் கதை : ப. தங்கம்

Image
9.6.1950 இல் சித்திரக்கலாசாலையில் மாணவனாக சேர்ந்ததிலிருந்து தன் அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார் தங்கம் அண்ணன். அவர் மீது அன்புகொண்ட அவரது தாய்மாமா கோவிந்தசாமி சித்திரக்கலாசாலையில் சேர் க் கிறார் . படிப்படியாக வேலைகளை கற்றுக்கொண்டு ஒரு போட்டோ ஸ்டுயோவுக்கு வேலைக்குப் போகிறார் . 1953 ஆம் ஆண்டு தினக்கூலியாக மூன்று ரூபாய் சம்பளம் . ஒரு ஆள் அன்று சாப்பிடப் போதுமாம் . மேல்படிப்பு படிக்க கன்னையன் என்பவர் படிப்பதற்கு உதவிபுரிந்துள்ளார் . இ . எஸ் . எல் . சி . டிராயிங் ப ரீ ட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளார் . அவரின் அம்மா ஆசீர்வாதம் செய்து அரசாங்க வேலை கிடைக்க வாழ்த்தியுள்ளார்கள் . தினத்தந்தியில் வேலை கிடைத்தது . அதில் சிலகாலம் வேலை பார்த்துள்ளார் . 1956 இல் மூன்று மாதம் கண்ணுசாமி என்பவரிடம் கற்றுக் கொண்டு அங்கு தங்குவதற்கு வசதிகள் இல்லாததால் திரும்ப கும்பகோணம் வந்துள்ளார் . 1957 இல் அவர்கள் அத்தை நிலக்கடலை விற்ற பணத்தை சேகரித்து அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தந்துள்ளார் . அதில்தான் தஞ்சாவூரில் வீட்டிலிருந்து மருத்துவக்கல்லுரிக்கு சென்று வந்துள்ளார் . அவர்களுக்கு துணையாக அவருடைய அத்தை இருந்துள்ளார் .