Posts

Showing posts from April, 2023

சிவகங்கைப்பூங்கா

Image
நேற்றைய நாளிதழில் வெளியான (நான்கு ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவகங்கை பூங்கா, தினமணி, 2 ஏப்ரல் 2023, பக்கம் 3) கட்டுரையைப் படித்ததும்  50 ஆண்டுகளுக்கு முன் நான் முதன் முறையாகவும், பின்னர் அவ்வப்போது சென்றதும் நினைவிற்கு வந்தது.  அச்செய்தி மூலமாக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகிலுள்ள இந்தப் பூங்கா, மாமன்னன் ராஜராஜசோழனால் உருவாக்கப்பட்ட சிவகங்கைக்குளத்தைச் சுற்றி பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1871-72ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதை அறிந்தேன். பூங்காவில்  பா. தமிழழகன் தஞ்சாவூரில் உள்ள முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சிவகங்கைப்பூங்கா தஞ்சாவூரில் இருப்பவர்களுக்கு ஒரு அழகிய பொழுதுபோக்கான இடமாகும்.  வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் தஞ்சைப் பெருவுடையார் கோயில், அரண்மனை மற்றும் இப்பூங்காவிற்கு அழைத்துச் செல்வோம். சுற்றுலாவிற்கு வருபவர்களும் இங்கு வந்துசெல்வதைப் பார்த்துள்ளேன்.  பூங்காவில் நெட்லிங்க மரங்கள், ஆல மரங்கள், வேப்ப மரங்கள் என பலவகையான மரங்கள், பறவைகள், விலங்குகளைப் பார்க்கலாம். குறிப்பாக அங்குள்ள புனுகுப்பூனையை வருபவர்கள் அனைவரும் அதிசயமாகப் பார்ப்பார்கள். பூங்காவ

அண்ணன் செல்வராஜ் (50ஆம் ஆண்டு நினைவு நாள்)

Image
பெரும்பாலான வணிகர்கள் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். இது வழக்கமாக செய்வார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவும் அண்ணன்களும் புதுக்கணக்கு போடுவதற்காகக் கடைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். அன்று என் செல்வராஜ் அண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திவிட்டார். அண்ணனை செல்லமாக ராசாப்பயல் என்று வீட்டில் அழைப்பார்கள். எங்கள் வீட்டார் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் என்றாலே அண்ணனின் நினைவுகள் அனைவருடைய மனதிற்கும் வந்துவிடும். இறந்த அண்ணனுக்காக அப்போது அப்பா ஆசைப்பட்டு சமாதி கட்டினார். அம்மா, அப்பாவின் மறைவிற்குப் பிறகு செல்வராஜ் அண்ணனுக்கு அண்ணன்களும், தம்பியும் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெண் பிள்ளைகளான நாங்களும் அதில் கலந்துகொள்வோம்.  எங்கள் பெற்றோரின் (திரு. திருவண்ணாமலை நாடார்-திருமதி தில்லையம்மாள்) மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள் எல்லாம் நினைப்பதைவிட பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் என அனைவரும் ஏப்ரல் மாதம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அண்ணனை நினைத்துக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்கள். சாமி கும்பிடும்போது அவர்கள