Posts

Showing posts from April, 2018

தஞ்சாவூர் : உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில்

Image
உஜ்ஜயினி மகாகாளியம்மன் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை 6.4.2018 நாளிட்ட தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் விரிவாக்க வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்,  அவ்விதழுக்கு நன்றியுடன். உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில் தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் வெள்ளைபிள்ளையார் கோயிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. பெருமுயற்சி எடுத்து உள்ளூர் பொதுமக்கள் குழுக்கள் அமைத்து வசூலித்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினர். 1989இல் இக்கோயிலின் முதல் குடமுழுக்கும், 2008இல் இரண்டாவது குடமுழுக்கும் நடைபெற்றன.   வரலாறு இக்கோயிலில் உள்ள அம்மனைப் பற்றி வாய்மொழியாக பல கதைகள் கூறுகின்றனர். வணிக நோக்கில் வெளியூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஒரு குடும்பத்தார் வண்டி கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவ்வாறு வரும்போது அவர்களுடன் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியும் அவளுடைய அண்ணனும் இருந்தார்கள். தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அருகே ஒரு குடிசையில் அவர்கள் தங்கியிருந்தனர். அனைவரும் வெளியில் சென்றிருந்தபோது சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள். வெளியே சென்றவர்கள் திரும்பிய சமயம் வீட்