Posts

Showing posts from February, 2019

ஒவ்வொரு நாளும் தாய்மொழி நாள்தான்

தாய்மொழியின் பெருமையை   உணர்த்த தாய்மொழி தினம் என்று  ஒரு குறிப்பிட்ட நாள் (பிப்ரவரி 21) கொண்டாடப்படுகிறது.  இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே கருதலாம்.  தினம் தினம் தாய்மொழி தினமாக்குவது பற்றி சிந்திப்போம்.  முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். குழந்தைகளை பழக்கப்படுத்துதல் இப்போதெல்லாம் வீட்டில் குழந்தைகள் அம்மா அப்பாவை மம்மி டாடி என்று கூறுகின்றார்கள். அவ்வாறு பேசும்போது பெற்றோரும் மகிழ்ச்சியடைந்து விடுகின்றார்கள். அவரவர் தாய்மொழியில் பேச வேண்டுமென்று பல நிலைகளில் வலியுறுத்தப்பட்டாலும் நாம் அவ்வாறு செய்வதில்லை. பலர் தம் குழந்தைகளை ஆங்கிலப் பாடல்கள் தான் பாடச் சொல்லிக் கொடுக்கின்றார்களே தவிர, தமிழ்ப் பாடல்களைக் கற்றுக்கொடுப்பதில்லை. அணில் பாட்டு, காக்கா பாட்டு, பாப்பா பாட்டு போன்ற பாடல்களை இப்போது குழந்தைகள் பாடுவதில்லை.  ஆங்கிலவழிப் பள்ளிகள் அதிகமாகி விட்ட நிலையில் தாய்மொழியைவிட்டு சற்று விலகிச் செல்கிறோம். முதலில் குழந்தைகளுக்கு வீட்டில் தாய்மொழியில் பேசினால் போதும்.  அவர்கள் பழக்கப்பட ஆரம்பித்துவிடுவார்கள். தாய்மொழி நாள் விழா தாய்மொழி