Posts

Showing posts from March, 2023

அமராவதி அத்தை

Image
எங்கள் அப்பாவினுடைய தாய்மாமாவின் மருமகள் அமராவதி அத்தை. அவர் குறிச்சித்தெருவில் எங்கள் வீட்டில்  குடியிருந்தார்கள். நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபொமுது எங்களுக்குத் தலை பின்னிவிடுவது, ஆற்றில் எங்களைக்  குளிப்பாட்டும் பொழுது  இறுக்கமாகப் பிடிக்கச் சொல்லி தலையை தண்ணீரில் முக்கி அலசிவிடுவது, சினிமாவுக்கு போகும்போது எங்களைத் தூக்கிக்கொள்வது, தலைமுடியை சிலுப்பாமல் மறுநாள் வரை அப்படியே இருக்குமாறு அழுத்திப்பின்னுவது என்று அவர்கள் எங்கள்மீது செலுத்திய அன்பானது இன்றும் நினைவில் நிற்கிறது.   கடைக்கு மாமா சென்றபின்  வீட்டிலேயே அத்தை சவ்வு மிட்டாய்  போடுவார்கள். அது ருசியாக இருக்கும்.  பள்ளிக்குச் செல்லும்போது மிட்டாய் வாங்க அம்மாவிடம் ஐந்து பைசா வாங்கிக்கொண்டுபோவோம். மாமா இருந்தால் எங்களுக்கு ஐந்து பைசாவுக்கு ஆறு மிட்டாய் தருவார். ஆனால் அத்தையோ ஐந்து பைசாவுக்கு ஐந்து மிட்டாய்தான் தருவார்கள். கரெக்டாக இருப்பார்கள். நாங்கள் அவர்கள் கொடுப்பதை வாங்கிவருவோம். என்னதான் வீட்டிலே தீனி தின்றாலும் அத்தை மிட்டாயை விடமாட்டீர்களே என்று அம்மா கூறுவார்கள். அவர்களுக்கு எங்கள்மீது அதிகம் பாசம் உண்டு.  எங்கள் வீட

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்

Image
         தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உதிரமாடன்குடியிருப்பில் உள்ள சாஸ்தா செண்பக கூத்தய்யன் கோயிலின் குடமுமுக்கு 12 செப்டம்பர் 2022, ஆவணி 27ஆம் நாளன்று சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவிற்கு குடும்பத்தாருடன் சென்றோம். குடமுழுக்கு நாளில் மூலவர் கோயிலின் பின்புறம் வலது பக்கத்தில் மகாதேவர் சன்னதி கோயிலின் எதிரில் உள்ள  சன்னதி இக்கோயில் இப்போது கருவறை, முன் மண்டபம், விமானம் ஆகியவற்றோடு உள்ளது. செண்பக கூத்தய்யன் என்று அழைக்கப்படும் செம்புகுத்தி அய்யனார் கருவறையில் அமர்ந்த நிலையில் பூர்ண புஷ்கலையுடன் உள்ளார்.  கருவறையின் முன்பாக வலது புறத்தில் பிரம்ம சக்தியம்மன் உள்ளார். மூலவருக்கு எதிராக முன் மண்டபத்தில் பலிபீடம், அதற்கு கீழ் யானை, குதிரை, நாய் ஆகியவை உள்ளன. கருவறையின் மேல் அழகிய விமானம் உள்ளது. முன்மண்டபத்தின் முன்பாக வலது புறத்தில் சுடலைமாடன், பேச்சியம்மன், இசக்கியம்மன், தளவாய்மாடன், மாடத்தி ஆகியோரும் இடது புறத்தில் முண்டனும் உள்ளனர். மூலவர் சன்னதியின் வெளியில் வலப்புறத்தில் மகாகணபதி சன்னதி உள்ளது. இவ்விரு சன்னதிகளுக்கும் பின்புறத்தில் சற்று தூரத்தில் குரு, மகாதேவர், மகாதேவ