Posts

Showing posts from October, 2019

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்

Image
சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து 30 கிமீ தொலைவில் இச்சிப்பாளையத்தில் மலைக்குன்றின் மீது 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் செல்ல 1320 படிகள் உள்ளன. கோயிலின் படிகளில் இரட்டை காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி சில ஆண்டுகள் வரை ஏறி இறங்கி வந்ததாகக் கூறினர். இக்கோயிலுக்கு அண்மையில் குடும்பத்தாருடன் காரில் சென்றோம். 1980களில் என் கணவர் இக்கோயிலுக்கு படிகளில் கால் நடையாக ஏறிச்சென்றதாகக் கூறினார். சிறிய அளவில் கோயிலின் தோற்றம் இருக்கும் என்று நினைத்தேன். மலைமேல் சென்றதும்தான் பெரிய அளவில் அங்கு கோயில்   இருப்பதைக் கண்டேன். முருகனின் ஆறுபடை கோயில்களையும் பார்த்துள்ளேன். ஆனால் இக்கோயிலை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது.   சிரம் என்றால் சென்னி என்றும், கிரி என்றால் மலை என்றும் பொருள்படுவதாகும். அதனால் சென்னிமலையை சிரகிரி என்றழைக்கின்றனர். ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போர் மூண்டபோது ஆதிசேஷனுடைய தலை விழுந்த இடம் சென்னிமலை என்ற பெருமையுடையது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது