Posts

Showing posts from January, 2022

73 ஆம் ஆண்டு குடியரசு தினம்

Image
எங்கள் வீட்டில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடியேற்றும் வழக்கம் உள்ளது. முன்பு மகன்கள் அப்பாவுடன் சேர்ந்து கொடியேற்றுவார்கள். அவர்கள் வேலைக்குச் சென்ற பிறகு நாங்கள் இருவரும் ஏற்றிவருகிறோம். பேரன்கள் ஊரில் இருந்தால் கலந்துக் கொள்வார்கள். ஒரு முறை எங்கள் பெரிய அக்காவின் பேத்திகள் பிரீத்தி, பிரியசகி வந்தார்கள். இளைய மகன் திருமணத்தின் முதல் நாள் குடியரசு தினம். அன்று வீட்டில் உறவினர்களுடன், மன்னார்குடி அக்கா பேத்திகள் அக்ஷரா, தக்ஷனா, பேரன்கள் தமிழழகன், தமிழமுதன் ஆகியோருடன் ஏற்றினோம்.   எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடும்பம் உள்ளது. அவர்களுடைய பேத்திகளான, பள்ளி மாணவிகளான ஸோபியாவும், பாவனாவும் அவர்களுடைய ஆத்தா, தாத்தா பழக்கம் காரணமாக எங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஸோபியா நன்றாக இந்தி பேசும். பட்டியாலாவில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படித்தது. பிறகு தஞ்சாவூர் வந்துவிட்டார்கள். ஸோபியா   நன்றாக ஓவியம் வரையும். ஆங்கிலத்தில் வார்த்தைகள் வந்து கேட்டு படித்துச் செல்லும். கொரானா காலம் என்பதால் வீட்டில் வந்து படிப்பது குறைந்துவிட்ட

ஓவியனின் கதை : ப. தங்கம்

Image
9.6.1950 இல் சித்திரக்கலாசாலையில் மாணவனாக சேர்ந்ததிலிருந்து தன் அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார் தங்கம் அண்ணன். அவர் மீது அன்புகொண்ட அவரது தாய்மாமா கோவிந்தசாமி சித்திரக்கலாசாலையில் சேர் க் கிறார் . படிப்படியாக வேலைகளை கற்றுக்கொண்டு ஒரு போட்டோ ஸ்டுயோவுக்கு வேலைக்குப் போகிறார் . 1953 ஆம் ஆண்டு தினக்கூலியாக மூன்று ரூபாய் சம்பளம் . ஒரு ஆள் அன்று சாப்பிடப் போதுமாம் . மேல்படிப்பு படிக்க கன்னையன் என்பவர் படிப்பதற்கு உதவிபுரிந்துள்ளார் . இ . எஸ் . எல் . சி . டிராயிங் ப ரீ ட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளார் . அவரின் அம்மா ஆசீர்வாதம் செய்து அரசாங்க வேலை கிடைக்க வாழ்த்தியுள்ளார்கள் . தினத்தந்தியில் வேலை கிடைத்தது . அதில் சிலகாலம் வேலை பார்த்துள்ளார் . 1956 இல் மூன்று மாதம் கண்ணுசாமி என்பவரிடம் கற்றுக் கொண்டு அங்கு தங்குவதற்கு வசதிகள் இல்லாததால் திரும்ப கும்பகோணம் வந்துள்ளார் . 1957 இல் அவர்கள் அத்தை நிலக்கடலை விற்ற பணத்தை சேகரித்து அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தந்துள்ளார் . அதில்தான் தஞ்சாவூரில் வீட்டிலிருந்து மருத்துவக்கல்லுரிக்கு சென்று வந்துள்ளார் . அவர்களுக்கு துணையாக அவருடைய அத்தை இருந்துள்ளார் .