Posts

Showing posts from 2019

பட்டத்து யானை : வேல ராமமூர்த்தி

Image
தமிழக வரலாற்றில் நடந்த பாஞ்சாலங்குறிச்சிப் போர் (செப்டம்பர் 1799), மதுரை திண்டுக்கல் கிளர்ச்சி (1800), சிவகங்கைப்போர் (1801), வேலூர்க்கோட்டைக் கிளர்ச்சி (1806), ராமன் நாயரது வயநாட்டுக் கிளர்ச்சி (1809), தளவாய் வேலுத்தம்பியின் திருவிதாங்கூர் கிளர்ச்சி (1809), சிப்பாய்ப் புரட்சி (1857), என விடுதலை வேண்டி வெகுண்டெழுந்த இயக்கங்களுக்கெல்லாம் வித்தூன்றிய கிளர்ச்சியான முதுகுளத்தூர் கிளர்ச்சி (1759)   (நூலின் முன்னுரை)   பற்றி இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூறு வருடங்களுக்குப் பின்னர் மாவீரன் மயிலப்பன், பெருநாழி ரணசிங்கமாக மறு உருவெடுத்தான். வெள்ளையர்களின் ஆதிக்க வேரறுக்க ரணசிங்கம் ஆடிய ஆவேசத் தாண்டவமே பட்டத்து யானை என்கிறார் நூலாசிரியர். இந்நூலில் கமுதி, பெருநாழி, ஆப்பநாடு, ரெட்டியாப்பட்டி, முதுகுளத்தூர், எருமைக்குளம், பரளச்சி, சித்தரங்குடி போன்ற ஊர்களும், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களும் இடம் பெற்றிருப்பதைக் கண்டேன். கதை நடக்கும் இடமாக அதிக எண்ணிக்கையில் ஊர்களைப் படித்தேன். இந்நூலில் வித்தியாசமாக நான் படித்தது கட்டுத்தாலி என்ற சடங்கு முறையாகும். இந்தச் சடங்கின்படி

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்

Image
சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து 30 கிமீ தொலைவில் இச்சிப்பாளையத்தில் மலைக்குன்றின் மீது 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் செல்ல 1320 படிகள் உள்ளன. கோயிலின் படிகளில் இரட்டை காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி சில ஆண்டுகள் வரை ஏறி இறங்கி வந்ததாகக் கூறினர். இக்கோயிலுக்கு அண்மையில் குடும்பத்தாருடன் காரில் சென்றோம். 1980களில் என் கணவர் இக்கோயிலுக்கு படிகளில் கால் நடையாக ஏறிச்சென்றதாகக் கூறினார். சிறிய அளவில் கோயிலின் தோற்றம் இருக்கும் என்று நினைத்தேன். மலைமேல் சென்றதும்தான் பெரிய அளவில் அங்கு கோயில்   இருப்பதைக் கண்டேன். முருகனின் ஆறுபடை கோயில்களையும் பார்த்துள்ளேன். ஆனால் இக்கோயிலை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது.   சிரம் என்றால் சென்னி என்றும், கிரி என்றால் மலை என்றும் பொருள்படுவதாகும். அதனால் சென்னிமலையை சிரகிரி என்றழைக்கின்றனர். ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போர் மூண்டபோது ஆதிசேஷனுடைய தலை விழுந்த இடம் சென்னிமலை என்ற பெருமையுடையது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது

மனதில் நிற்கும் மைசூர் சுற்றுலா

Image
கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான மைசூருக்கும் அருகிலுள்ள இடங்களுக்கும் அண்மையில் சுற்றுலா சென்றோம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களைக்கொண்ட இடங்களையும் பயணத்தின்போது கண்டோம். மைசூரிலும் சுற்றுப்பகுதிகளிலும் பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம் என அனைத்து இடங்களும் நன்கு பராமரிக்கப்படுவதைக் காணமுடிந்தது. ஆட்டோ கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்தது. மெழுகு அருங்காட்சியகம் மைசூருக்கு அருகிலுள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் உள்ள மெழுகுச்சிலைகள் உண்மையான மனிதர்களைப் போலவே காணப்பட்டன. அமர்ந்த நிலையிலிருந்த மகாத்மா காந்தி எங்களை மிகவும் கவர்ந்துவிட்டார்.   200க்கு மேற்பட்ட கர்நாடக மற்றும் மேல்நாட்டு இசைக்கருவிகளைப் பார்த்துப் பரவசமடைந்தோம்.   சாமுண்டீஸ்வரி கோயில் கோயிலுக்கு முன்பாக நம்மை வரவேற்கும் வகையில் மகிஷாசுரன் வலது கையில் வாளுடனும், இடது கையில் பாம்புடனும் நிற்கிறான்.   3486 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகும். அம்மனை தரிசிக்க மலை மீது செல்வதற்கு கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ன. 12ஆம் நூற்றாண்

இன்றும் தொடரும் வானொலி கேட்கும் அனுபவம்

Image
1939 மே 16இல் தொடங்கப்பட்ட திருச்சி வானொலி நிலையத்தின் 80ஆவது ஆண்டு விழா நிறைவு பெறுகின்ற  இவ்வேளையில் வானொலியுடனான    என் 40 வருட அனுபவத்தை நினைவுகூர்வது மகிழ்ச்சியாக உள்ளது.      தற்போது எங்கள் இல்லத்தில் நான் சுமார் 40 ஆண்டுகளாக வானொலியில் திரைப்படப் பாடல்கள் கேட்டு வருகிறேன். நான் பிறந்த வருடத்தில் (1965) வீட்டில் ரேடியோ வாங்கியதாகப் பெருமையாகக் கூறுவார்கள். அந்த ரேடியோப்பெட்டி பெரியதாகவும், ஸ்விட்ச்கள் வித்தியாசமாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும். 50 வருடங்களுக்கு முன்னர் ஒரு சில வீட்டில்தான் வானொலி இருக்கும். வானொலியில் அப்பா செய்திகள் கேட்பார். காலையில் விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு என்று நிகழ்ச்சிகள் தொடங்கும். காலை 7.25க்கு சேவை செய்திகள் என்று ஆரம்பித்து அன்றைக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் கூறுவார்கள். அதை நாங்கள் கேட்டுக்கொண்டு பிடித்த நிகழ்ச்சிகள் என்றால் கேட்க உட்கார்ந்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமைகளில் சுசித்ராவின் ஹார்லிக்ஸ் குடும்பம் என்று ஒரு நாடகம் ஒலிபரப்புவார்கள். அப்பாவை போடச்சொல்லி, காலை 12.00 மணியளவில் அந்த நிகழ்ச்சியை நாங்கள் தவறாமல் கேட்போ

நெஞ்சமெல்லாம் சிவம் : சிவம் 100

Image
என் அண்ணி திருமதி கண்மணி ராமமூர்த்தியின் தந்தையான திரு சி.மு.சிவம் (சி.மு.சிவலிங்கம்) அவர்களுடைய நூற்றாண்டு நினைவாக அக்குடும்பத்தார் ஒரு அழகான மலரை உருவாக்கியுள்ளனர். அதில் அவருடைய மகன்கள்-மருமகள்கள்,   மகள்கள்-மருமகன்கள், பேரன்கள்-பேத்திகள், கொள்ளுப்பேரன்கள்-பேத்திகள் அவரைப் பற்றிய நினைவுகளை எழுதியுள்ளனர். குடும்பத்தார் மற்றும் அரசியல் பிரமுகர்களுடனும் அவர் உள்ள அரிய புகைப்படங்கள் அந்த மலரில் உள்ளன.     அவருடன் பழகிய அனுபவம், அவரைப் பற்றி கேட்டு அறிந்த அனுபவம், அவருடைய பாசம், எண்ணம், துணிச்சல், பழக்க வழக்கங்கள், மரியாதை, நற்பண்புகளை அவர்கள் எழுதியுள்ளனர்.   அனைவருடைய மனதிலும் இடம்பெறும் வகையில் அந்த நினைவுகள் காணப்படுகின்றன. அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பினைச் சுருக்கமாகக் காண்போம். விருதுநகர் மாவட்டம் கல்லூரணியில் பிறந்தார். (29.7.1919) பெரியாரால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதைத் தொண்டரானார் (1933-36) இந்தித்திணிப்பை எதிர்த்து கைது செய்யப்பட்டார்   (1938) காரைக்கால் வணிகரின் மகள் கோவிந்தம்மாளை சடங்கு மறுத்து சுயமரியாதை திருமணம் செய்தார். (21.8.1940) காரைக்காலில்

உலக மகளிர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிருக்காக இத்தினம் கொண்டாடப்படுவது பெருமைக்குரியதாகும்.   பெண்கள் என்று கூறும்போது அனைத்தும் அதில் அடங்கிவிடுகிறது. ஒரு தாய்க்கு மகளாகவும், மாமியாருக்கு மருமகளாகவும், கணவருக்கு மனைவியாகவும், பிள்ளைக்கு தாயாகவும், பேரன் பேத்திகளுக்கு பாட்டியாகவும், சகோதரனுக்கு சகோதரியாகவும்…இவ்வாறாக இன்னும் உறவுமுறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எத்தளை முறைகளில் நம்மை அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பதில் பெண்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்தான் இருக்கும். பெண்கள் இந்த நூற்றாண்டில் எல்லா துறைகளிலும் சாதிக்கின்றார்கள். ஆட்டோ   ஓட்டுவதில் தொடங்கி சிறிய கடைகள் நடத்துதல், கப்பல் துறை, ராணுவம், மருத்துவம், கல்வி நிலையங்கள் என பல துறைகளில் பல பதவிகளில் இருப்பதை நாம் பார்க்கவும், படிக்கவும் செய்கிறோம். பல்லாண்டுகளாக பெண்கள் பல சேவைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். பெண்கள் தினம் என்றால் என் நினைவிற்கு வருவது டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியே. தொடர்ந்து வாசுகி, சாரதாதேவி, கஸ்தூரிபாய் காந்தி, விஜயலட்சுமி பண்டிட், அன்னை தெரசா, இந்திரா க

ஒவ்வொரு நாளும் தாய்மொழி நாள்தான்

தாய்மொழியின் பெருமையை   உணர்த்த தாய்மொழி தினம் என்று  ஒரு குறிப்பிட்ட நாள் (பிப்ரவரி 21) கொண்டாடப்படுகிறது.  இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே கருதலாம்.  தினம் தினம் தாய்மொழி தினமாக்குவது பற்றி சிந்திப்போம்.  முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். குழந்தைகளை பழக்கப்படுத்துதல் இப்போதெல்லாம் வீட்டில் குழந்தைகள் அம்மா அப்பாவை மம்மி டாடி என்று கூறுகின்றார்கள். அவ்வாறு பேசும்போது பெற்றோரும் மகிழ்ச்சியடைந்து விடுகின்றார்கள். அவரவர் தாய்மொழியில் பேச வேண்டுமென்று பல நிலைகளில் வலியுறுத்தப்பட்டாலும் நாம் அவ்வாறு செய்வதில்லை. பலர் தம் குழந்தைகளை ஆங்கிலப் பாடல்கள் தான் பாடச் சொல்லிக் கொடுக்கின்றார்களே தவிர, தமிழ்ப் பாடல்களைக் கற்றுக்கொடுப்பதில்லை. அணில் பாட்டு, காக்கா பாட்டு, பாப்பா பாட்டு போன்ற பாடல்களை இப்போது குழந்தைகள் பாடுவதில்லை.  ஆங்கிலவழிப் பள்ளிகள் அதிகமாகி விட்ட நிலையில் தாய்மொழியைவிட்டு சற்று விலகிச் செல்கிறோம். முதலில் குழந்தைகளுக்கு வீட்டில் தாய்மொழியில் பேசினால் போதும்.  அவர்கள் பழக்கப்பட ஆரம்பித்துவிடுவார்கள். தாய்மொழி நாள் விழா தாய்மொழி