Posts

Showing posts from April, 2020

ஆரோக்கியம் தரும் பாரம்பரிய முறை

அக்காலத்தில் முன்னோர்கள் குழந்தைகளை வளர்த்த விதம் அவர்களை ஆரோக்கியத்தோடு வைத்திருந்தது . எண்ணெய்க்குளியல் தொடங்கி ஒவ்வொன்றிலும் பெரியவர்கள் குழந்தைகளை பாரம்பரிய முறைகளை கடைபிடித்து கவனமாக வளர்த்து வந்தனர் . எண்ணெய்க்குளியல் ஆண் குழந்தைகளையும் , பெண் குழந்தைகளையும் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள் . உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் ஊறவைத்துவிட்டு , சீயக்காய்த்தூளைத் தேய்த்து நீரை ஊற்றிய பின்னர் , அரைத்த விரலி மஞ்சளை உடல் முழுவதும் பூசிவிட்டு குளிப்பாட்டுவர் . ஆண் குழந்தைகளுக்கு பூனை முடி போன்ற குட்டி உரோமங்கள் உதிர்வதற்காக விரலி மஞ்சள் பூசப்படுகிறது .   வளருங்காலத்தில் மீசை முளைக்காது என்ற காரணத்தால் ஆண் குழந்தைகளுக்கு மஞ்சள் பூசுவதை முதல் ஒரு மாதத்தோடு ( நான்கு வாரங்களுடன் ) நிறுத்திக்கொள்வார்கள் . உர மருந்து எண்ணெய் தேய்த்த குளித்த நாளில் ஆண் குழந்தைகளுக்கும் , பெண் குழந்தைகளுக்கும் உர மருந்து தருவர் . வசம்பு , ஜாதிக்காய் , மாசிக்காய் , சுக்கு பெருங்காயம் , பூண்டுப்பல் ஆகியவற்றை உர மருந்தாக , சிறிதளவு உரசி தாய்ப்பாலில் கலந