Posts

Showing posts from March, 2019

நெஞ்சமெல்லாம் சிவம் : சிவம் 100

Image
என் அண்ணி திருமதி கண்மணி ராமமூர்த்தியின் தந்தையான திரு சி.மு.சிவம் (சி.மு.சிவலிங்கம்) அவர்களுடைய நூற்றாண்டு நினைவாக அக்குடும்பத்தார் ஒரு அழகான மலரை உருவாக்கியுள்ளனர். அதில் அவருடைய மகன்கள்-மருமகள்கள்,   மகள்கள்-மருமகன்கள், பேரன்கள்-பேத்திகள், கொள்ளுப்பேரன்கள்-பேத்திகள் அவரைப் பற்றிய நினைவுகளை எழுதியுள்ளனர். குடும்பத்தார் மற்றும் அரசியல் பிரமுகர்களுடனும் அவர் உள்ள அரிய புகைப்படங்கள் அந்த மலரில் உள்ளன.     அவருடன் பழகிய அனுபவம், அவரைப் பற்றி கேட்டு அறிந்த அனுபவம், அவருடைய பாசம், எண்ணம், துணிச்சல், பழக்க வழக்கங்கள், மரியாதை, நற்பண்புகளை அவர்கள் எழுதியுள்ளனர்.   அனைவருடைய மனதிலும் இடம்பெறும் வகையில் அந்த நினைவுகள் காணப்படுகின்றன. அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பினைச் சுருக்கமாகக் காண்போம். விருதுநகர் மாவட்டம் கல்லூரணியில் பிறந்தார். (29.7.1919) பெரியாரால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதைத் தொண்டரானார் (1933-36) இந்தித்திணிப்பை எதிர்த்து கைது செய்யப்பட்டார்   (1938) காரைக்கால் வணிகரின் மகள் கோவிந்தம்மாளை சடங்கு மறுத்து சுயமரியாதை திருமணம் செய்தார். (21.8.1940) காரைக்காலில்

உலக மகளிர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிருக்காக இத்தினம் கொண்டாடப்படுவது பெருமைக்குரியதாகும்.   பெண்கள் என்று கூறும்போது அனைத்தும் அதில் அடங்கிவிடுகிறது. ஒரு தாய்க்கு மகளாகவும், மாமியாருக்கு மருமகளாகவும், கணவருக்கு மனைவியாகவும், பிள்ளைக்கு தாயாகவும், பேரன் பேத்திகளுக்கு பாட்டியாகவும், சகோதரனுக்கு சகோதரியாகவும்…இவ்வாறாக இன்னும் உறவுமுறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எத்தளை முறைகளில் நம்மை அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பதில் பெண்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்தான் இருக்கும். பெண்கள் இந்த நூற்றாண்டில் எல்லா துறைகளிலும் சாதிக்கின்றார்கள். ஆட்டோ   ஓட்டுவதில் தொடங்கி சிறிய கடைகள் நடத்துதல், கப்பல் துறை, ராணுவம், மருத்துவம், கல்வி நிலையங்கள் என பல துறைகளில் பல பதவிகளில் இருப்பதை நாம் பார்க்கவும், படிக்கவும் செய்கிறோம். பல்லாண்டுகளாக பெண்கள் பல சேவைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். பெண்கள் தினம் என்றால் என் நினைவிற்கு வருவது டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியே. தொடர்ந்து வாசுகி, சாரதாதேவி, கஸ்தூரிபாய் காந்தி, விஜயலட்சுமி பண்டிட், அன்னை தெரசா, இந்திரா க