Posts

Showing posts from 2020

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவுகள்

Image
  திரைப்படங்களில் அதிகமாகப் பாடிய எஸ்.பி.பி, அவர்களுடைய குரலால் அதிகமாக ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவர். அவருடைய பாடல் வெளியான   முதல் திரைப்படம் 1969இல் வந்த ‘சாந்தி நிலையம்’. அதில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் “இயற்கை என்னும் இளையக் கன்னி”. அப்பாடலை டிவியில், ரேடியோவில் எப்போது போட்டாலும் கேட்பேன். மனதுக்கு ரம்மியமாக இருக்கின்ற பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ்ப் பாடல்களுக்கு முன்பே தெலுங்கு, கன்னடம்,  போன்ற மொழிகளில் பாடல்களை பாடியிருக்கிறார். 40,000 பாடல்களுக்கு மேலாக பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் பத்மஸ்ரீ (2001),   பத்மபூஷண் (2011), 47ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது (2016) உள்ளிட்ட தேசிய விருதுகளையும், 25 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். பல்துறை வித்தகரான அவர்  உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.      அவர் பாடகர் மட்டுமல்ல. திரைப்பட இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர் திரைப்பட பின்னணிக்குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். பெரும

தமிழர் திருநாள், கார்த்திகைத் திருநாள் : மாம்ஸ்பிரஸ்ஸோ

Image
 மாம்ஸ்பிரஸ்ஸோ நடத்திய போட்டியில் வெற்றிபெற்ற, என்னுடைய பதிவுகளை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாம்ஸ்பிரஸ்ஸோவுக்கு நன்றி. தமிழர் திருநாள் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா வீட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள் . ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வது , வெள்ளையடிப்பது போன்ற வேலைகள் நடக்கும் . பொங்கல் வந்தாலே வீடுகளில் சுத்தம் செய்வதைப் பார்க்கமுடியும் . தைத்திருநாளை தமிழர்கள் விழாவாகக் கொண்டாடும்போது ஒருவிதமான மகிழ்ச்சி கிடைக்கும் . அம்மா வீட்டில் சர்க்கரைப்பொங்கல் , வெண்பொங்கல் , மற்றும் ஒற்றை அடிப்படையில் ஐந்து , ஏழு வகையான காய்கறிகளுடன் சாம்பார் ஆகியவற்றை சமைத்து அவற்றுடன் கரும்பு , வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு , தேங்காய் என வைத்து சாமி கும்பிடுவோம் . மறு நாளான மாட்டுப்பொங்கலை வெகு சிறப்பாகக் கொண்டாடுவோம் . கூட்டுக்குடும்பமாக இருந்ததால் ஆளுக்கொரு வேலைகளை நாங்களாகவே எடுத்துக்கொண்டு சீக்கிரம் அவற்றை முடித்துவிடுவோம் . அண்ணன்கள் , அண்ணிகள் , அக்காக்கள் , தங்கைகள் , தம்பி , பிறகு   அண்ணன் பிள்ளைகள் , அக்கா பிள்ளைகள் , என்று வீடே களைக்கட்டிவிடும் . மா

குற்றப்பரம்பரை : வேல ராமமூர்த்தி

Image
நான் அண்மையில் படித்த , வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை (டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, 2016) நூலிலிருந்து எனக்குப் பிடித்தவற்றைப் பகிர்கிறேன் . “ கொம்பூதி கிராமத்துக் கள்ளர்களின் வாழ்க்கைதான் இந்நாவலின் கருவாகும் . உலகம் முழுவதும் கள்ளர்கள் இருந்திருக்கிறார்கள் . இந்தக் கள்ளர் இன மக்களின் தலைவரான வேயன்னாவும் அவரது தாய் கூழானிக் கிழவியும் மறக்கமுடியாத பாத்திரங்களாய் செலுத்தப்பட்டுள்ளனர் . இந்தக் கதையில் வேயன்னாவின் கூட்டம் , மகன் சேதுவிடம் செய்து கொடுத்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு களவை நிறுத்தி விடுகிறார்கள் . கள்ளர்கள் கொள்ளையிடும் வீட்டின் அமைப்பை ஆக்காட்டிக் குருவியின் துணையோடு அறிவதும் கன்னக்கோலிட்டுத் திருடுவதும் விலைமதிப்பற்ற பொருட்களைக் கூட கொள்ளையடிக்கப்பட்டு வந்த பின் அவற்றின் அருமை தெரியாமலேயே பச்சமுத்து போன்ற பணிவுமிக்க அயோக்கியர்களிடம் தாரை வார்ப்பதும் உண்மையில் வாழ்ந்த ஒரு வாழ்க்கைப் பதிவுதான் ”, என்கிறார் எஸ் . ஏ . பெருமாள் . இதில்வரும் பாத்திரங்களில் எனக்கு பிடித்தவர்கள் வேயன்னா , அவனுடைய மனைவி அங்கம்மா , வேயன்னாவின் அம்மா கூழானிக்கிழவி , அவர்களின் மகள் அன்னமயில