Posts

Showing posts from February, 2017

மனதில் நிற்கும் மகாமகங்கள்

Image
-கடந்த ஆண்டு இதே நாளில் (22 பிப்ரவரி 2016) மகாமகம் சென்ற நினைவாக -   நான் கண்ட மூன்று மகாமகங்களைப் பற்றிய அனுபவங்கள் இன்று பத்திரிக்கை.காம். இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வெளியிட்ட அவ்விதழுக்கு மனமார்ந்த நன்றி. கும்பகோணம் என்றால் கோயில்கள். காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக கும்பகோணத்தைக் கோயில் மாநகரம் என்று கூறுவர். ஆண்டுக்கொரு முறை வருவது மாசி மகம். குறிஞ்சி மலர் பூப்பது 12 ஆண்டுக்கொரு முறை. அதுபோல பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை வருவது மகாமகம். குறிஞ்சி மலர் பூத்ததை பார்த்த அனுபவம் எனக்கு இல்லை. ஆனால் முதன்முதலாக நான் பார்த்த மகாமகத்தை என்னால் மறக்க முடியாது. இதுவரை மூன்று மகாமகங்களை நான் பார்த்துள்ளேன்.  1980 மகாமகம் 1980இல் கும்பகோணத்திற்கு மகாமகத்திற்கு என் பெற்றோர் சென்றுவந்து அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் முதன்முதலாக மகாமகத்தைப் பற்றி அறிந்தேன். 1992 மகாமகம் நான் ஆவலோடு விசாரித்த கும்பகோணத்திற்கே திருமணம் ஆகிவருவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன் கோயில்களுக்கு அதிகம் சென்றதில்லை. புகுந்த இடம் கும்பகோணம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலுள்ளோர

அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை

Image
2014இல் காசிக்கும் பிற இடங்களுக்கும் நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்ததைப் பற்றி   அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை  என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை 7 டிசம்பர் 2014 நாளிட்ட தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தினமணி இதழுக்கு நன்றி.  காசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில் புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையிலிருந்து அலகாபாத்திற்கு எங்களை வழியனுப்ப மகன், மருமகள், பேரன் ஆகியோர் வந்தனர். அவர்கள் எங்களை ரயிலில் அமர வைத்துவிட்டு, வட மாநிலங்களில் முன்பதிவு செய்திருந்தால்கூட நம் இருக்கையில் அவரவர் போக்கில் வந்து அமர்வார்கள் என்றுகூறி  எங்களை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி சொல்லி வழியனுப்பினர். எங்கள்  அண்ணியின் உறவினர் துணையாக வந்தனர். அவர்கள் தொடர்ந்து காசிக்கு 17 ஆண்டுகளாக தம்பதிசகிதமாக வருவதாகக் கூறினர். அவர்களுடன் செல்வதைப் புண்ணியமாகக் கருதி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.    அலகாபாத் 8.10.2014 விடியற்காலை அலகாபாத் வந்து நகரத்தார் சத்திரத்தில் தங்கினோம். உடைமைகளை அங்க