Posts

Showing posts from 2018

கோடியக்கரை சரணாலயம்

Image
2015இல் வேதாரண்யம் பயணத்தில் கோடியக்கரை சென்றோம். கோடியக்கரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.  வன உயிரினச் சரணாலயத்திற்குச் செல்லும் இரு வழியில் கருவேலஞ்செடிகளும், மரங்களும் உள்ளன.  இப்பாதையில் செல்ல அச்சமாக இருந்தது. அவ்வூரைச் சேர்ந்தவர்கள் உடன் வந்ததால் பயம் சற்று குறைவாக இருந்தது. கடற்கரை அருகே கலங்கரை விளக்கத்தினைக் கண்டோம். சரணாலயத்திற்குள் அனுமதி பெற்று சென்றோம்.   சரணாலயத்திற்குள் மான், நீர்க்காகம், காட்டெருமை, கொக்கு, நாரை போன்றவற்றைப் பார்த்தோம்.   நாங்கள் சென்றபோது உரிய பருவ காலமில்லாததால் குறைந்த அளவே வன விலங்குகளை காணமுடிந்தது. தமிழகத்தில் இப்பகுதியில் இவ்வாறாக பெரிய நிலப்பரப்பில் சரணாலயம் உள்ளதைக் கண்டு வியந்தோம். கோயிலின் கோபுரத்தைக் கடற்கரையிலிருந்து காணமுடிந்தது.    பழைய கலங்கரை விளக்கம் தற்போது கடல் உள் வாங்கிவிட்டதால் கோபுரம் சற்று தொலைவில் தெரிவதாக உடன் வந்தவர்கள் கூறினர்.  கடலில் மீன் பிடிக்க படகில் செல்வதற்கு வலை, சாப்பாடு எடுத்துக்கொண்டு கடலுக்குச் செல்ல ஆயத்தமானார்கள். அவர்களிடம் திரும்பி வருவதற்கு

நடிகையர் திலகம் சாவித்திரி

Image
இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன்.  கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ்,  சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.  ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் அனைவருக்கும் சாவித்திரியை நினைவுபடுத்தின.  நன்றி சமயம் சினிமா செய்திகள் அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட இன்ப துன்பங்களை திரைப்படத்தில் சிறப்பாக அமைத்துள்ளனர். பேரும் புகழுடன் வந்த நிலையில் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாரி வழங்கும் வள்ளலாக இருந்ததை அறியமுடிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்த அவர் தன் பெரியப்பா குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்து தொடங்கி, இளம் வயதில் நாட்டியம் கற்றல் தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தல் போன்றவை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. பெரியப்பாவுடன் சென்னை வந்து பல ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கி பின்னர் இறுதியாக நடிக்கும் வாய்ப்பினைப் பெறும் காட்சிகள் சினிமாவின்மீதான அவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.  நன்றி தி இந்து குடும்பத்தின்மீதான பாசம், தந்தையில்லா நிலையில் தந்தை எப்படி இருப்பார் என நினைத்துப்பார்த்தல், திரையில் தன் திறமைகளை வெள

தஞ்சாவூர் : உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில்

Image
உஜ்ஜயினி மகாகாளியம்மன் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை 6.4.2018 நாளிட்ட தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் விரிவாக்க வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்,  அவ்விதழுக்கு நன்றியுடன். உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில் தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் வெள்ளைபிள்ளையார் கோயிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. பெருமுயற்சி எடுத்து உள்ளூர் பொதுமக்கள் குழுக்கள் அமைத்து வசூலித்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினர். 1989இல் இக்கோயிலின் முதல் குடமுழுக்கும், 2008இல் இரண்டாவது குடமுழுக்கும் நடைபெற்றன.   வரலாறு இக்கோயிலில் உள்ள அம்மனைப் பற்றி வாய்மொழியாக பல கதைகள் கூறுகின்றனர். வணிக நோக்கில் வெளியூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஒரு குடும்பத்தார் வண்டி கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவ்வாறு வரும்போது அவர்களுடன் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியும் அவளுடைய அண்ணனும் இருந்தார்கள். தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அருகே ஒரு குடிசையில் அவர்கள் தங்கியிருந்தனர். அனைவரும் வெளியில் சென்றிருந்தபோது சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள். வெளியே சென்றவர்கள் திரும்பிய சமயம் வீட்