73 ஆம் ஆண்டு குடியரசு தினம்

எங்கள் வீட்டில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடியேற்றும் வழக்கம் உள்ளது. முன்பு மகன்கள் அப்பாவுடன் சேர்ந்து கொடியேற்றுவார்கள். அவர்கள் வேலைக்குச் சென்ற பிறகு நாங்கள் இருவரும் ஏற்றிவருகிறோம். பேரன்கள் ஊரில் இருந்தால் கலந்துக் கொள்வார்கள். ஒரு முறை எங்கள் பெரிய அக்காவின் பேத்திகள் பிரீத்தி, பிரியசகி வந்தார்கள். இளைய மகன் திருமணத்தின் முதல் நாள் குடியரசு தினம். அன்று வீட்டில் உறவினர்களுடன், மன்னார்குடி அக்கா பேத்திகள் அக்ஷரா, தக்ஷனா, பேரன்கள் தமிழழகன், தமிழமுதன் ஆகியோருடன் ஏற்றினோம்.  



எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடும்பம் உள்ளது. அவர்களுடைய பேத்திகளான, பள்ளி மாணவிகளான ஸோபியாவும், பாவனாவும் அவர்களுடைய ஆத்தா, தாத்தா பழக்கம் காரணமாக எங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஸோபியா நன்றாக இந்தி பேசும். பட்டியாலாவில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படித்தது. பிறகு தஞ்சாவூர் வந்துவிட்டார்கள். ஸோபியா  நன்றாக ஓவியம் வரையும். ஆங்கிலத்தில் வார்த்தைகள் வந்து கேட்டு படித்துச் செல்லும். கொரானா காலம் என்பதால் வீட்டில் வந்து படிப்பது குறைந்துவிட்டது.  சிறுவயது முதல் எங்கள் வீட்டில் இருந்தது ஸோபியா மட்டுமே. இரண்டாவது பேத்தி பாவனாவும், பேரன் ஸ்ரீராமும் அதிகம் இருந்ததில்லை.

ஸோபியாவின் தாய்வழித் தாத்தாவும் ராணுவத்தில் வேலைப்பார்த்து பணி ஓய்வு பெற்றவர். ஸோபியாவின் அப்பாவும், சித்தப்பாவும் ராணுவத்தில் பணிபுரிகிறார்கள். எங்கள் வீட்டில் கொடியேற்றும் முதல் நாளே வந்து, எத்தனை மணிக்கு கொடி ஏற்றுவீர்கள் என்று கேட்டுச் செல்வார்கள். கொடியேற்றும் நேரத்திற்கு சற்று முன்பாகவே இருவரும் வந்துவிடுவார்கள். சில சமயங்களில் அவர்களுடைய தம்பியும் வருவான். இவர்கள்  தேசப்பற்றுடன் இருப்பதை பார்த்து வாழ்த்துக்கள் கூறுவோம். இந்த ஆண்டும் கொடியேற்றி தேசிய கீதம் பாடி கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

ஜெய்ஹிந்த்.





Comments

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்