திரு திருமூர்த்தி பணி நிறைவு (31 மே 2022)

இன்று பணிநிறைவு பெறும் என் தங்கை தி.தமிழ்ச்செல்வியின் கணவர் திரு. த. திருமூர்த்தி அவர்களுக்கு என் சார்பாகவும், எங்கள் குடும்பம் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


திரு த.திருமூர்த்தி (பி.1962) அவர்களின் பெற்றோர் (நினைவில் வாழும்) திரு.தங்கையன் நாடார்-திருமதி. தி.ராஜம்மாள்ந்தை கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தாயார் இல்லதரசி. அவருக்கு உடன்பிறந்தோர் ஒரு அண்ணன் மற்றும்  ஒரு தங்கை. அவருடைய மனைவி (என்னுடைய தங்கை) திருமதி தி.தமிழ்ச்செல்வி. மூத்த மகன் திரு.தி.ரஞ்சித்குமார் (மருமகள் ரபூஜாஇரண்டு பேரன்கள் ஹர்ஷிவ், ஹிரித்விக்) இளைய மகன் செல்வன் தி. திலக். மகன்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். 


அவர், தான் பணிக்கு வந்த சூழலை அவர் பின்வருமாறு கூறினார்.

“எனக்கு பி.எஸ்.சி., இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தபோது அரசுத்துறையில் தகுதி அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி (1990) கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிடைத்து. இது எனக்கு பிடித்தமான வேலை,  வேலைக்கு சேர்ந்த முதல் இன்று வரை .தினமும் காலை 6.00 மணிக்கு மாணவர்களுக்கு விளையாட்டு சொல்லிக்கொடுப்பதற்காகச் செல்வேன். மாலையில் பள்ளிமுடிந்தும் 4.30 மணி முதல் 6.00 மணி வரை அதைத் தொடர்வேன்.”

“என்னிடம் பயின்மாணவர்கள் இன்று மருத்துவராகவும், பொறியாளராகவும், காவல்துறையினராகவும், பெரும் ணிகர்களாகவும் இருப்பதாகக் கூறும்போது னக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களை விளையாட்டுத்துறையில் தேசிய அளவில் போட்டிகளுக்கு அனுப்புவதைப் பெருமையாகக் கருதுவேன். அவ்வகையில் எங்கள் பள்ளிக்கு புகழ் சேர்ப்பது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களை நாம் அன்போடு கையாள வேண்டும். அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக் கொள்வார்கள். ஆசிரியர் பணி என்பதானது மிகவும் சிறப்பான பணியாகும்.”

நான் 16 தலைமையாசிரியர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். அவர்களின் அனுபவங்கள், பழகும் முறைகள், மாணவர்களை நல்வழிப்படுத்த அவர்கள் கூறும் அறிவுரைகள் எனக்கு நல்ல அனுபவங்கள் ஆகும்.”

“பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்த நான் மறக்கமுடியாத நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்வு என்றால் பயிற்சி வகுப்பிற்காகக் கன்னியாகுமரி சென்றபோது பல ஊர்களிலிருந்து  வந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் மாணவர்களை கையாளும் முறைகளையும், மைதானத்தில் விளையாடுவதில் உள்ள நுணுக்கங்களையும் பார்த்தும், கேட்டும் கற்றுக்கொண்டேன்.”

“அடுத்து சொல்வதென்றால் குடும்பத்தில் அம்மா, அப்பா என்னை நல்வழிப்படுத்தி வளர்த்து ஆளாக்கியது போல் பள்ளி மாணவர்கள் நல்வழியைப் பின்பற்றுவதற்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன். நாம் சொல்வதைக் கேட்கும் மாணவர்களைப் பார்த்தால் மனதுக்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.”

Comments

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்