மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளி : 6-8 ஆம் வகுப்பு

ஆறாம் வகுப்பு ஆசிரியர் சீதாராமன் சார். அவர் பாடங்களை வேகமாக நடத்துவார். அவர் போர்டில் எழுதுவது புரியாது. நாங்கள் ரஃப் நோட்டில் எழுதிக்கொண்டு அப்புறம் நோட்டில் எழுதிவைத்துக் கொள்வோம். கணக்கு டீச்சர் வந்தால் பயமாக இருக்கும். வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் அவர் கிள்ளுவார் அல்லது குச்சியால் அடிப்பார். ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியரோ டீச்சரோ வகுப்பெடுக்க வருவார்கள். அப்போது வாரம் ஒரு முறை விளையாட்டு, கைத்தொழில் வகுப்புக்கள்  உண்டு.


ஏழாம் வகுப்பு ஆசிரியர் ரமணி சார். அவர் உயரமாக இருப்பார். பாடப்புத்தகத்தை எடுத்து யாரையாவது வாசிக்கச் சொல்லி அதற்கான பொருளைக் கூறுவார். ஆசிரியர்கள் வீட்டுக்கணக்கு, அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைதல் போன்ற வீட்டுப் பாடங்களைத் தருவார்கள். ஆங்கிலத்தில் சிறிய கதைகளைக் கொண்ட நான்டீடெயில் புத்தகம் உண்டு.         

எட்டாம் வகுப்பு சென்றதும் அப்போது ஈஎஸ்எல்சி தேர்வு என்றும், ஆகையால் கவனமாக படிக்கவேண்டும் என்றும் சொன்னார்கள். வகுப்பாசிரியரான நபிகள்நாயகம் அவர்களை அனைவரும் அண்ணா சார் என்று அழைப்போம். அவர் ஆங்கிலம் பாடம் புரியும்படியாகவும்  நடத்துபவர், அனைவருக்கும் ஆங்கிலத்தில் பெயர் சொல்லி எழுதக் கற்றுத்தந்தவர். காலையில் பிரேயர் முடிந்ததும் அப்படியே எட்டாம் வகுப்பை நிற்கவைத்து டிக்டேசன் போடுவார். அவர் சொல்லச் சொல்ல நாங்கள் அனைவரும் எழுதுவோம். ஐந்து நிமிடம் என கணக்கு வைத்துக் கொள்வார், பத்துக்கு மேற்பட்ட வார்த்தைகள் சொல்லிவிடுவார். எழுதி முடிந்ததும் பக்கத்தில் உள்ளவர்களிடம் கொடுத்து சரிசெய்துகொள்ளுங்கள் என்பார். அதிகம் மார்க் எடுத்தவர்களுக்கு கைதட்டல் கிடைக்கும், நான் அந்த அளவுக்கு ஆசைப்படுவது கிடையாது. சுமாராகத் தான் படிப்பேன்.

முழு ஆண்டு தேர்வுக்கு முன்பாக வகுப்பு ஆசிரியர்களுக்கு டீ பார்டி கொடுத்தோம்மாணவர், மாணவிகளிடம் பணம் வசூலித்து ஸ்வீட், காரம், டீ போன்றவற்றை அனைவருக்கும்  வழங்கிக் கொண்டாடினோம். பிறகு ஆசிரியர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். 

தேர்வுகளின் முடிவுகள் வந்ததும் வகுப்புத் தோழிகளுடன் பள்ளிக்குச்சென்று தலைமையாசிரியரிடம் டி.சி. வாங்கி, பின்னர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தோம்.

Comments

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்