உவரி, வள்ளியூர், கன்னியாகுமரி சுற்றுலா

9.3.2026 இரவு தஞ்சாவூரிலிருந்து,  திருநெல்வேலி  விரைவு ரயிலில் கிளம்பி மறுநாள் காலை  திருநெல்வேலி சென்றடைந்தோம். அங்கிருந்து டவுன்பஸ்ஸில்  உவரிக்குச் சென்றோம்.  கடலில் முழுக்குப் போட்டுவிட்டு பிறகு அருகிலேயே இருக்கும் நல்லத்தண்ணீர் கிணற்றில் தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டு அதன்பிறகு சுயம்புலிங்கசுவாமியைத் தரிசிக்க சென்றோம். கோயிலில் அர்ச்சகரிடமே நாம் பூஜைக்கு வேண்டியதை பொங்கல் வைப்பதற்கும், அர்ச்சனை செய்வதற்கும் அவர்களே செய்து தருவார்கள். அதற்கு உண்டான பணத்தை வாங்கிக் கொள்வார்கள். சிவனை தரிசித்தோம். சற்று நேரம் கோயிலில்  ஓய்வெடுத்தோம்.



 நம் முன்னோர்களின்  பெயர்கள் சுயம்புலிங்கம், செம்புலிங்கம், ஜம்புலிங்கம் என்றிருக்கும். சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் கோயிலில் சிவன் சந்நதியின் மண்டபம் மட்டும் பார்த்துள்ளேன்.  இப்போது இக்கோயிலின் மண்டபம், கோயிலின் முன்பாக பெரிய கோபுரம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நன்கொடையாக பணம் ஜிபேயில் செலுத்திவிட்டு அங்கிருந்து என் நாத்தனார் குலதெய்வம் உள்ள வள்ளியூருக்குக் கிளம்பினோம். 

வள்ளியூர் சென்றடைந்தபின் முதலில் போகும் வழியில் அங்குள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சென்றோம். அங்கு முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். 


இக்கோயில் குடவரைக் கோயில் ஆகும். இதற்கு முன்பு மலையடிப்பட்டி, திருக்கோகர்ணம், திருமயம், சித்தன்னவாசல், கமுகுமலை, குடுமியான்மலை, நார்த்தமலை, சென்னிமலை  கொல்லிமலை போன்ற இடங்களைப்பார்த்துள்ளேன். இங்கு உள்ள முருகன் கோயில் மலை மீது உள்ளது பார்ப்பதற்கு மிகவும் அழகாய் உள்ளது. 

நாத்தனார் வீட்டு குலதெய்வமான மூன்று யுகம் கண்ட அம்மன் கோயிலுக்குச் சென்றோம். இக் கோயில் சிறிய கோயிலாகவும், அம்மன் சிறியதாக அழகாக இருந்தது. முன்புறமும், பின்புறமும் மரங்கள் இருந்தன. 





காற்று நன்றாக வீசியது. இக்கோயிலில் உண்டியல் கிடையாது. நாங்கள் கொண்டு சென்ற காணிக்கையை அர்ச்சனைத்தட்டில் பூசாரியிடம் தட்டில் வைத்துக் கொடுத்தோம். இதற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன் என் நாத்தனாருடன் இங்கு வந்துள்ளேன். 

அங்கிருந்து கிளம்பி பேருந்தில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். கடற்கரை அருகில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை  தரிசித்துவிட்டு கடற்கரைக்கு வந்தோம். அன்று  காற்று அதிகமாக இருந்ததால் படகு செல்வதற்கு அனுமதியில்லை. 







காந்தி மண்டபத்திற்கும், காமராஜர் மண்டபத்திற்கும் சென்றோம். காந்தியும் காமராஜரும் அருகருகே அமர்ந்திருக்கும் சிலையைக் கண்டோம்.  இருட்டும்வரை கடல் அலைகளையும் வண்ண நிற மின்சார விளக்குகளின் வெளிச்சத்தில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் கண்டு ரசித்தோம். மறுநாள் காலை சூரிய உதயம் பார்க்க முடிவெடுத்து தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். 

Comments

அதிக வாசிப்பு

குருக்கத்தி மாசி பெரியசாமி : தினமணி

கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் கோயில்களில் அன்னாபிஷேகம்

அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை