Posts

Showing posts from November, 2026

உவரி, வள்ளியூர், கன்னியாகுமரி சுற்றுலா

Image
9.3.2026 இரவு தஞ்சாவூரிலிருந்து,  திருநெல்வேலி  விரைவு ரயிலில் கிளம்பி மறுநாள் காலை  திருநெல்வேலி சென்றடைந்தோம். அங்கிருந்து டவுன்பஸ்ஸில்  உவரிக்குச் சென்றோம்.  கடலில் முழுக்குப் போட்டுவிட்டு பிறகு அருகிலேயே இருக்கும் நல்லத்தண்ணீர் கிணற்றில் தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டு அதன்பிறகு சுயம்புலிங்கசுவாமியைத் தரிசிக்க சென்றோம். கோயிலில் அர்ச்சகரிடமே நாம் பூஜைக்கு வேண்டியதை பொங்கல் வைப்பதற்கும், அர்ச்சனை செய்வதற்கும் அவர்களே செய்து தருவார்கள். அதற்கு உண்டான பணத்தை வாங்கிக் கொள்வார்கள். சிவனை தரிசித்தோம். சற்று நேரம் கோயிலில்  ஓய்வெடுத்தோம்.  நம் முன்னோர்களின்  பெயர்கள் சுயம்புலிங்கம், செம்புலிங்கம், ஜம்புலிங்கம் என்றிருக்கும். சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் கோயிலில் சிவன் சந்நதியின் மண்டபம் மட்டும் பார்த்துள்ளேன்.  இப்போது இக்கோயிலின் மண்டபம், கோயிலின் முன்பாக பெரிய கோபுரம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நன்கொடையாக பணம் ஜிபேயில் செலுத்திவிட்டு அங்கிருந்து என் நாத்தனார் குலதெய்வம் உள்ள வள்ளியூருக்குக் கிளம்பினோம்.  வள்ளியூர் சென்றடைந்தபின் முத...