தலைமுறைகள் ரசிக்கும் நடிகர் திலகம்

நான் சிறு வயதில் அண்ணன்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் ராஜபார்ட் ரங்கதுரை, வசந்த மாளிகை, பாலும் பழமும் இப்படியாக பலப் படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய படமும், பாடல்களும் என்றுமே மறக்கமுடியாதவை, என்னுடைய திருமணத்திற்குப் பின்பு கும்பகோணத்தில், மாமியார் வீட்டில் அனைவரும் சிவாஜி ரசிகர்கள். அதிகமாக சிவாஜி திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். புகைப்படம் நன்றி : மாலை மலர் எங்கள் மாமியார் வீட்டிற்குப் பெரிய அண்ணன் மகன் ராஜு வந்தபொழுது அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் குடியிருப்பவர்களுடன் பாசமலர் படத்திற்குச் சென்றோம். அவன் அந்தப்படத்தில் வரும் காட்சிகளையைப் பார்த்து தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். நான், அவனிடம் இது உண்மையில்லையப்பா என்று சமாதானம் செய்தேன். அவனுடைய சிறு வயது பாசத்தை அப்போது பார்த்தேன். இப்பொமுதும்கூட பாசமலர் படம் பார்க்கும்போது அண்ணன் மகன் ஞாபகம் வந்துவிடும். நான் மாமியார், கொழுந்தனார், எங்கள் மாமா மகன் கர்ணன் மச்சான், விஜயா அக்கா ஆகியோருட...