பெத்தண்ணன் கலையரங்கம்
இன்று வெளியான "பெத்தண்ணன் கலையரங்கம்" (வி.என்.ரா., தினமணி புத்தாண்டு மலர் 2025) என்ற கட்டுரையைப் படித்தேன். அதைப் படித்ததும் பழைய நினைவுகள் வந்தன.
பெத்தண்ணன் கலையரங்கத்திற்கு பள்ளி ஆண்டு விழாவிற்காக இரு முறை சென்றுள்ளேன்.
அவர்கள் வீட்டில் நடந்த, அவருடைய மகளின் திருமணத்திற்கு என் அம்மாவுடன் சென்றது இன்றும் நினைவில் உள்ளது. பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். கருப்பு, சிகப்பு வண்ணத்தில் கொடிகள் அதிகமாக இருந்தன.
நான், என் சகோதரிகளுடன் மிளகாய், அரிசி, கோதுமை அரைப்பதற்கு கீழ வாசலில் அப்போது வெண்சங்கு சீயக்காய்த் தூள் கம்பெனிக்குப் பக்கத்தில் இருந்த மாவு மில்லுக்குப் போவோம். இன்றும் அவ்விடத்திற்கு பெயர் வெண்சங்கு என அனைவரும் அடையாளத்திற்கு கூறுகிறோம். அருகில் இருந்த அவர்களுடைய வீட்டின் பக்கத்தில் நெல்லு அவித்து கலத்தில் கொட்டி இருப்பார்கள். நாங்கள் பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும், அங்கு ஆட்கள் வேலை செய்வதை வேடிக்கை பார்ப்போம். இக்கட்டுரையைப் படித்ததும் பழைய நினைவுகள் வந்தன. பெத்தண்ணன் அவர்கள் மறைந்தாலும் அவர் செய்த பல நன்மைகளைப் பற்றி மக்கள் இன்றும் பேசுவதை கேட்டிருக்கிறேன். அவருடைய பேரன் திரு. சி. வெங்கடேசன் கவுன்சலராக இருப்பதறிந்து மகிழ்கிறேன்.
Comments
Post a Comment