அக்னிச்சிறகுகள் : எ.பி.ஜெ.அப்துல் கலாம், அருண் திவாரி

அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் (தமிழில் மு.சிவலிங்கம்) படித்தேன் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. ஏவுகணைகளை எப்படி செய்கிறார்கள் எனவும், அதில் அனைவருக்கும் புரியும்படியாகவும், சுலபமாகவும் இருக்கிறது. இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் மு. சிவலிங்கம். அப்துல் கலாம் பாசமிக்கவர், ஒரு மேதை, ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்லைவர், ஏவுகணையின் தலைவன், வேலையில் கவனமாக இருப்பவர், அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றும் நிலைந்திருக்கும். மாணவர் சமுதாயத்தை கனவுகாணுங்கள் என்றவர். அவரது பிறந்த நாளான இன்று (15 அக்டோபர் 2023) அவருடைய புத்தகத்திலிருந்து சிலவற்றை நினைவு கூறுகிறேன். " விமானப்படை விமானியாக வேண்டும் என்ற என்னுடைய கனவு, நான் கலெக்டராக வேண்டும் என்ற என் அப்பாவின் கனவெல்லாம் நனவாகாமல் போய் நான் ராக்கெட் என்ஜினியரான கதையைச் சொல்லலாமே என்று தோன்றியது. எனக்கு அறிவாற்றலையும், உத்வேகத்தையும் தந்த புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகளுக்கு நான்மிகவும் கடமைப்பட்டிருக்கறேன். இவர்களில் விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், பிரம்பிரகாஷ் ஆகியோரும் அடக்கம். எனது வாழ்க்கையிலும் இந...