கோடியக்கரை சரணாலயம்

2015இல் வேதாரண்யம் பயணத்தில் கோடியக்கரை சென்றோம். கோடியக்கரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.  வன உயிரினச் சரணாலயத்திற்குச் செல்லும் இரு வழியில் கருவேலஞ்செடிகளும், மரங்களும் உள்ளன. 


இப்பாதையில் செல்ல அச்சமாக இருந்தது. அவ்வூரைச் சேர்ந்தவர்கள் உடன் வந்ததால் பயம் சற்று குறைவாக இருந்தது. கடற்கரை அருகே கலங்கரை விளக்கத்தினைக் கண்டோம். சரணாலயத்திற்குள் அனுமதி பெற்று சென்றோம்.  சரணாலயத்திற்குள் மான், நீர்க்காகம், காட்டெருமை, கொக்கு, நாரை போன்றவற்றைப் பார்த்தோம்.  நாங்கள் சென்றபோது உரிய பருவ காலமில்லாததால் குறைந்த அளவே வன விலங்குகளை காணமுடிந்தது. தமிழகத்தில் இப்பகுதியில் இவ்வாறாக பெரிய நிலப்பரப்பில் சரணாலயம் உள்ளதைக் கண்டு வியந்தோம். கோயிலின் கோபுரத்தைக் கடற்கரையிலிருந்து காணமுடிந்தது. 


 











பழைய கலங்கரை விளக்கம்
தற்போது கடல் உள் வாங்கிவிட்டதால் கோபுரம் சற்று தொலைவில் தெரிவதாக உடன் வந்தவர்கள் கூறினர். கடலில் மீன் பிடிக்க படகில் செல்வதற்கு வலை, சாப்பாடு எடுத்துக்கொண்டு கடலுக்குச் செல்ல ஆயத்தமானார்கள். அவர்களிடம் திரும்பி வருவதற்கு எத்தனை நாள்கள் ஆகும் என்று கேட்டபோது அவர்கள் குறைந்தது மூன்று நாள்கள் ஆகும் என்றும், சாப்பாடு மற்ற அனைத்தையும் படகில் தயாரித்துக்கொள்வோம் என்று கூறினர். திரும்பும்வரை குடும்பத்தினர் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் என்று கூறினர். முன்பு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் வசதி இல்லாத காலத்தில் கஷ்டப்பட்டதாகவும், தற்போது அந்தக் கவலை எதுவும் இல்லை என்றும், திரும்பி வருவது தாமதப்பட்டால் வீட்டிற்கு கைபேசி மூலம் தெரிவித்துவிடுவதாகக் கூறினர். மீனவர்களை வழியனுப்ப குத்தகைக்காரர்கள் வருவார்கள் என்று கூறினர்.    நாகப்பட்டினம், பூம்புகார், ராமேஸ்வரம், திருச்செந்தூர், உவரி, கன்னியாகுமரி போன்ற பல இடங்களில் கடற்கரைக்குச் சென்றுள்ளேன். இபோதுதான் முதன்முதலாக கடற்கரையோரத்தில் உள்ள சரணாலயத்தைப் பார்த்தேன்.  இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. 

நன்றி : எங்களை அழைத்துச் சென்ற திரு சித்திரவேலு, ஆசிரியர்

Comments

  1. படங்களும், விளக்கவுரைகளும் நன்று.

    ReplyDelete
  2. அருமை
    ஒருமுறை சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தங்களின் பதிவு தூண்டிவிட்டுள்ளது
    நன்றி

    ReplyDelete
  3. 1982ல் கோடியக்கரை பறவைகள் சரணாலம் சென்று வந்த நிகழ்வு இன்னும் பசுமையாக நெஞ்சில் நிற்கின்றது. Flemingoes மற்றும் Sea gull ஆகிய பறவை இனங்கள் நூற்றுக்கணக்கில் ஒருசேர பறந்து வரும் அழகு மிகவும் ரம்மியமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்நிகழ்வினை நினைவுபடுத்தியமைக்கு எனது நன்றி.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்