Posts

Showing posts from 2024

பெத்தண்ணன் கலையரங்கம்

Image
இன்று வெளியான "பெத்தண்ணன் கலையரங்கம்" (வி.என்.ரா., தினமணி புத்தாண்டு மலர் 2025) என்ற கட்டுரையைப் படித்தேன். அதைப் படித்ததும் பழைய நினைவுகள் வந்தன. பெத்தண்ணன் கலையரங்கத்திற்கு பள்ளி ஆண்டு விழாவிற்காக இரு முறை சென்றுள்ளேன். அவர்கள் வீட்டில் நடந்த, அவருடைய மகளின் திருமணத்திற்கு என் அம்மாவுடன் சென்றது இன்றும் நினைவில் உள்ளது. பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். கருப்பு, சிகப்பு வண்ணத்தில் கொடிகள் அதிகமாக இருந்தன. நான், என் சகோதரிகளுடன் மிளகாய், அரிசி, கோதுமை அரைப்பதற்கு கீழ வாசலில் அப்போது வெண்சங்கு சீயக்காய்த் தூள் கம்பெனிக்குப் பக்கத்தில் இருந்த மாவு மில்லுக்குப் போவோம். இன்றும் அவ்விடத்திற்கு பெயர் வெண்சங்கு என அனைவரும் அடையாளத்திற்கு கூறுகிறோம். அருகில் இருந்த அவர்களுடைய வீட்டின் பக்கத்தில் நெல்லு அவித்து கலத்தில் கொட்டி இருப்பார்கள். நாங்கள் பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும், அங்கு ஆட்கள் வேலை செய்வதை வேடிக்கை பார்ப்போம். இக்கட்டுரையைப் படித்ததும் பழைய நினைவுகள் வந்தன. பெத்தண்ணன் அவர்கள் மறைந்தாலும் அவர் செய்த பல நன்மைகளைப் பற்றி மக்கள் இன்றும் பேசுவதை கேட்டிருக்கிறேன். அவரு...

கடைசிப் பக்கம் : கண்ணதாசன்

Image
அண்மையில் கண்ணதாசனின் பல நூல்களைப் படித்தேன். அதில் கடைசிப்பக்கம் நூலிலிருந்து எனக்குப் பிடித்தவற்றைப் பகிர்கிறேன். 1.காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்; உங்கள் திருமணத்தைப் பெற்றோரிடம் ஒப்படையுங்கள்; பிறகு உங்கள் எதிர்காலத்தைப் பாருங்கள். 2.நாம் செய்யாத ஒன்றுக்காக நாம் தண்டிக்கப்படுவோமாயின், அதன் பெயரே ஊழ்வினை. 3.செய்வினை திருத்தப்படலாம்; ஊழ்வினையைத்  திருத்தமுடியாது. 4.சந்நியாசி அளந்து வாழ்கிறான்; சம்சாரி அளவுக்கு மீறி வாழ்கிறான். 5.நம்பிக்கை வைத்து ஒருவனைப் பின் தொடரும்போது நீ அவசரக்காரனாக இருந்தால் அதுவரையில் பட்ட கஷ்டம் வீணாகிவிடும். 6.குழந்தையின் நம்பிக்கையைத் தாய் சிதைத்துவிட்டால், குழந்தை கொடியவனாக மாறிவிடக் கூடும். 7.படுக்கையில் இருக்கும் நோயாளிக்குப் பிரார்த்தனையைத் தவிர வேறு பயனுள்ள கருவி எது? 8.நல்ல சந்தர்ப்பங்களை எதிர்ப்பார்த்து, வரும் சோதனைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். 9.பிறரை வரவேற்றுக் கருணைக் காட்டுவதே கோவில். ஆகவே, இந்துவின் குடும்பம் ஒரு கோவில். 10.ஆடை அணிவதில் கூட  இனி அடக்கம் வேண்டியிருக்கும். 11."நாம் சொத்து சேர்க்காமல் விட்டு விட்டோமே" என்று நான் வருந்...