அமர்நாத் யாத்திரை

என் சகோதரிகளின் குடும்பத்தார் ஜூலை 2023இல் அமர்நாத் செல்லத் திட்டமிட்டிருந்தபோது, அதற்கு முன்னர் நான் நாளிதழில் படித்த செய்தி நினைவிற்கு வந்தது. "தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத்தில் 3,880 மீட்டர் உயரத்தில் ஆண்டுதோறும் இயற்கையாக பனிலிங்கம் உருவாகிறது. இந்த லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். 62 நாள்களுக்கு நீடிக்கவுள்ள அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் சனிக்கிழமை (1.7.2023) முறைப்படி தொடங்குகிறது. 48 கி,மீ நீளம் நுன்வான்/பஹல்காம் பாதையிலும் கந்தர்மால் மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. நீளம் பால்டால் பாதையிலும் யாத்திரை நடைபெற உள்ளது." (நன்றி : தினமணி, 1.7.2023) சுற்றுலா செல்வது யாவருக்கும் பிடித்த ஒன்று. தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா கோயில்கள் இருக்கின்றன. நான் தமிழ்நாட்டிற்கு வெளியில் முதலில் சென்றது மந்த்ராலயம். அடுத்து காசி, மைசூர், பேலூர், ஹலேபேட், சோம்நாத்பூர் போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளேன். இந்த வருடம் என் சகோதரிகளின் குடும்பத்தார் பஞ்சாபில் பொற்கோயில், வாகா பார்டர், ஜாலியன்வாலாபாக் நினைவுச்சின்னம், அமர்நாத் பனி லிங்கம...