சிவகங்கைப்பூங்கா

நேற்றைய நாளிதழில் வெளியான (நான்கு ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவகங்கை பூங்கா, தினமணி, 2 ஏப்ரல் 2023, பக்கம் 3) கட்டுரையைப் படித்ததும் 50 ஆண்டுகளுக்கு முன் நான் முதன் முறையாகவும், பின்னர் அவ்வப்போது சென்றதும் நினைவிற்கு வந்தது. அச்செய்தி மூலமாக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகிலுள்ள இந்தப் பூங்கா, மாமன்னன் ராஜராஜசோழனால் உருவாக்கப்பட்ட சிவகங்கைக்குளத்தைச் சுற்றி பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1871-72ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதை அறிந்தேன். பூங்காவில் பா. தமிழழகன் தஞ்சாவூரில் உள்ள முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சிவகங்கைப்பூங்கா தஞ்சாவூரில் இருப்பவர்களுக்கு ஒரு அழகிய பொழுதுபோக்கான இடமாகும். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் தஞ்சைப் பெருவுடையார் கோயில், அரண்மனை மற்றும் இப்பூங்காவிற்கு அழைத்துச் செல்வோம். சுற்றுலாவிற்கு வருபவர்களும் இங்கு வந்துசெல்வதைப் பார்த்துள்ளேன். பூங்காவில் நெட்லிங்க மரங்கள், ஆல மரங்கள், வேப்ப மரங்கள் என பலவகையான மரங்கள், பறவைகள், விலங்குகளைப் பார்க்கலாம். குறிப்பாக அங்குள்ள புனுகுப்பூனையை வருபவர்கள் அனைவரும் அதிசயமாகப...