திரு திருமூர்த்தி பணி நிறைவு (31 மே 2022)

இன்று பணிநிறைவு பெறும் என் தங்கை தி.தமிழ்ச்செல்வியின் கணவர் திரு. த. திருமூர்த்தி அவர்களுக்கு என் சார்பாகவும், எங்கள் குடும்பம் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு த.திருமூர்த்தி (பி.1962) அவர்களின் பெற்றோர் (நினைவில் வாழும்) திரு . ப . தங்கையன் நாடார் - திரு மதி. தி . ராஜம்மாள் . த ந்தை கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரிய ராகப் பணியாற்றியவர். தாயார் இல்லதரசி . அவருக்கு உடன்பிறந்தோர் ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை. அவருடைய மனைவி (என்னுடைய தங்கை) திருமதி தி . தமிழ்ச்செல்வி . மூத்த மகன் திரு . தி . ரஞ்சித்குமார் ( மருமகள் ர . பூஜா , இரண்டு பேரன்கள் ஹர்ஷிவ், ஹிரித்விக் ) இளைய மகன் செல்வன் தி. திலக் . மகன்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அவர், தான் பணிக்கு வந்த சூழலை அவர் பின்வருமாறு கூறினார். “எனக்கு பி . எஸ் . சி ., இரண்டாம் வருடம் படித்துக்கொண் டிருந்தபோது அரசுத்துறையில் தகுதி அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி (1990) கரூ...