மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளி : அன்றும் இன்றும்

தஞ்சாவூர் மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளியில் நாங்கள் படித்த காலத்தில் ( 1970-78) இரு புறமும் செடிகள் இருக்கும் . மைதானத்தின் நடுவில் வாதாங்காய் மரம் இருக்கும் . விளையாட்டு வகுப்பின்போது மைதானத்தில் கீழே விழுந்துகிடக்கும் வாதாங்காயை எடுத்து , உடைத்து அதில் உள்ள பருப்புகளைத் தின்போம் . அது முந்திரி சுவையோடு இருக்கும் . ஒரு வகை பூ மரம் இருக்கும் . அந்தப் பூவை பறித்துத் தின்போம் . அது புளிப்புச்சுவையுடன் இருக்கும் . அதைத் தவிர சாணிக்காய் மரம் என்ற மரம் இருக்கும் . அதன் காயைத் தண்ணீரில் போட்டால் ஊறிவிடும் . வேப்பமரத்தில் இருந்து உதிரும் வேப்பம்பழங்களை மற்றவர்கள் தின்பதை பார்த்திருக்கிறேன் . நான் தின்றது கிடையாது . பள்ளியின் வாசல் கதவுகளாக மூங்கிலால் ஆன தட்டிகள் இருக்கும் . பள்ளியின் வளா கத்தில் நுழைந்ததும் இடதுபுறம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை இருக்கும் . வகுப்பில் உட்காருவதற்கு நீளமான ஒரு பலகை இருக்கும் . மூன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை பெஞ்சில் அமர்ந்திருப்போம் . எட்டாம் வகுப...