எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவுகள்

திரைப்படங்களில் அதிகமாகப் பாடிய எஸ்.பி.பி, அவர்களுடைய குரலால் அதிகமாக ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவர். அவருடைய பாடல் வெளியான முதல் திரைப்படம் 1969இல் வந்த ‘சாந்தி நிலையம்’. அதில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் “இயற்கை என்னும் இளையக் கன்னி”. அப்பாடலை டிவியில், ரேடியோவில் எப்போது போட்டாலும் கேட்பேன். மனதுக்கு ரம்மியமாக இருக்கின்ற பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ்ப் பாடல்களுக்கு முன்பே தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் பாடல்களை பாடியிருக்கிறார். 40,000 பாடல்களுக்கு மேலாக பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் பத்மஸ்ரீ (2001), பத்மபூஷண் (2011), 47ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது (2016) உள்ளிட்ட தேசிய விருதுகளையும், 25 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். பல்துறை வித்தகரான அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடகர் மட்டுமல்ல. திரைப்பட இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர் திரைப்பட பின்னணிக்குர...