அப்பாவுக்காக : ஜ. பாக்கியவதி

அண்மையில் நான் எங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகளை என் சகோதர சகோதரிகளின் குடும்பத்தாரிடம் எழுதி வாங்கி நூலாகத் தொகுத்து வழங்கியுள்ளேன். அந்நூலில் உள்ள என்னுரையைப் பதிவதில் மகிழ்கின்றேன். நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன் . திருமணத்திற்குப் பிறகு என் கணவர் படிக்கச் சொன்னார் . ஆனால் எனக்கு ஆர்வம் இல்லை . மகன்கள் படித்து கொண்டிருக்கும்போது எனக்கு கம்யூட்டரில் தமிழ் டைப் அடிக்க கற்றுக்கொடுத்தார்கள் . அவர்கள் வேலைக்குச் சென்றபிறகு தினமும் நாளிதழும் , நூல்களும் படிக்க ஆரம்பித்தேன் . படிப்பதினால் சிந்திக்கும் திறமை வளர்வதை அறிந்தேன் . நாங்கள் சுற்றுலா சென்றதைப்பற்றிய அனுபவத்தை எழுதும்படி என் கணவர் கூறியதன் அடிப்படையில் எழுதிய “ மந்த்ராலயமும் ஹம்பியும் ” கட்டுரை முதன்முதலில் 29.4.2013 நாளிட்ட தினமணி நாளிதழில் வெளியானது . தொடர்ந்து காசி , உறவினர்களின் குலதெய்வக் கோயில்களுக்கு சென்றதைப் பற்றி எழுதினேன் . நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து , கணவரின் பணி நிறைவு பெற்ற நாளில் கோயில் உலா என்ற தலைப்பில் சிறிய நூலாக வெளியிட்டோம் எதையுமே பதிவாக வைத்திருக்க வேண்ட...