நெஞ்சமெல்லாம் சிவம் : சிவம் 100

என் அண்ணி திருமதி கண்மணி ராமமூர்த்தியின் தந்தையான திரு சி.மு.சிவம் (சி.மு.சிவலிங்கம்) அவர்களுடைய நூற்றாண்டு நினைவாக அக்குடும்பத்தார் ஒரு அழகான மலரை உருவாக்கியுள்ளனர். அதில் அவருடைய மகன்கள்-மருமகள்கள், மகள்கள்-மருமகன்கள், பேரன்கள்-பேத்திகள், கொள்ளுப்பேரன்கள்-பேத்திகள் அவரைப் பற்றிய நினைவுகளை எழுதியுள்ளனர். குடும்பத்தார் மற்றும் அரசியல் பிரமுகர்களுடனும் அவர் உள்ள அரிய புகைப்படங்கள் அந்த மலரில் உள்ளன. அவருடன் பழகிய அனுபவம், அவரைப் பற்றி கேட்டு அறிந்த அனுபவம், அவருடைய பாசம், எண்ணம், துணிச்சல், பழக்க வழக்கங்கள், மரியாதை, நற்பண்புகளை அவர்கள் எழுதியுள்ளனர். அனைவருடைய மனதிலும் இடம்பெறும் வகையில் அந்த நினைவுகள் காணப்படுகின்றன. அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பினைச் சுருக்கமாகக் காண்போம். விருதுநகர் மாவட்டம் கல்லூரணியில் பிறந்தார். (29.7.1919) பெரியாரால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதைத் தொண்டரானார் (1933-36) இந்தித்திணிப்பை எதிர்த்து கைது செய்யப்பட்டார் (1938) காரைக்கால் வணிகரின் மகள் கோவிந்தம்மாளை சடங்கு மறுத்து சுயமரியாதை திருமணம் செய்தார...