கோடியக்கரை சரணாலயம்
2015இல் வேதாரண்யம் பயணத்தில் கோடியக்கரை சென்றோம். கோடியக்கரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. வன உயிரினச் சரணாலயத்திற்குச் செல்லும் இரு வழியில் கருவேலஞ்செடிகளும், மரங்களும் உள்ளன. இப்பாதையில் செல்ல அச்சமாக இருந்தது. அவ்வூரைச் சேர்ந்தவர்கள் உடன் வந்ததால் பயம் சற்று குறைவாக இருந்தது. கடற்கரை அருகே கலங்கரை விளக்கத்தினைக் கண்டோம். சரணாலயத்திற்குள் அனுமதி பெற்று சென்றோம். சரணாலயத்திற்குள் மான், நீர்க்காகம், காட்டெருமை, கொக்கு, நாரை போன்றவற்றைப் பார்த்தோம். நாங்கள் சென்றபோது உரிய பருவ காலமில்லாததால் குறைந்த அளவே வன விலங்குகளை காணமுடிந்தது. தமிழகத்தில் இப்பகுதியில் இவ்வாறாக பெரிய நிலப்பரப்பில் சரணாலயம் உள்ளதைக் கண்டு வியந்தோம். கோயிலின் கோபுரத்தைக் கடற்கரையிலிருந்து காணமுடிந்தது. பழைய கலங்கரை விளக்கம் தற்போது கடல் உள் வாங்கிவிட்டதால் கோபுரம் சற்று தொலைவில் தெரிவதாக உடன் வந்தவர்கள் கூறினர். கடலில் மீன் பிடிக்க படகில் செல்வதற்கு வலை, சாப்பாடு எடுத்துக்கொண்டு கடலுக்குச் செல்ல ஆயத்தமானார்க...