நடிகையர் திலகம் சாவித்திரி

இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன். கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ், சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் அனைவருக்கும் சாவித்திரியை நினைவுபடுத்தின. நன்றி சமயம் சினிமா செய்திகள் அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட இன்ப துன்பங்களை திரைப்படத்தில் சிறப்பாக அமைத்துள்ளனர். பேரும் புகழுடன் வந்த நிலையில் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாரி வழங்கும் வள்ளலாக இருந்ததை அறியமுடிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்த அவர் தன் பெரியப்பா குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்து தொடங்கி, இளம் வயதில் நாட்டியம் கற்றல் தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தல் போன்றவை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. பெரியப்பாவுடன் சென்னை வந்து பல ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கி பின்னர் இறுதியாக நடிக்கும் வாய்ப்பினைப் பெறும் காட்சிகள் சினிமாவின்மீதான அவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. நன்றி தி இந்து குடும்பத்தின்மீதான பாசம், தந்தையில்லா நிலையில் தந்தை எப்படி இருப்பார் என நினைத்துப்பார்த்தல், த...