வாசிப்பை நேசிப்போம் : தினமணி

உலக புத்தக தினமான இன்று (23 ஏப்ரல் 2017), தினமணி சென்னைப்பதிப்பில் கருத்துக்களம் பகுதியில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் 7 ஜுலை 2014 அன்று வெளியான என் கட்டுரையை பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். ஒரு விடுமுறையின்போது படிக்கும் பழக்கம் எனக்கு ஆரம்பித்தது. தற்போது தொடர்ந்து செய்தித்தாளை படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு, வாசிப்புப் பழக்கம் பல பயன்களைத் தந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை. திருமணத்திற்கு முன்பாக நான் ரேடியோவில் பாட்டுகள், செய்திகள், ஒலிச்சித்திரம் போன்றவற்றை ஆர்வமாகக் கேட்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை எனது சகோதரர்கள் கதைப்புத்தகம் வாங்கித் தருவார்கள். அதை சகோதர - சகோதரிகள், அண்ணிகள் போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். என் தந்தை அவ்வப்போது செய்தித்தாளை வாங்கிப் படிப்பார்கள். அப்போது வாசிக்கும் பழக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. எங்களது திருமணத்திற்குப் பின் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளச் சொன்னார் என் கணவர். எனக்கு அப்போது படிப்பில் கவனம் ...