மனதில் நிற்கும் மகாமகங்கள்

-கடந்த ஆண்டு இதே நாளில் (22 பிப்ரவரி 2016) மகாமகம் சென்ற நினைவாக - நான் கண்ட மூன்று மகாமகங்களைப் பற்றிய அனுபவங்கள் இன்று பத்திரிக்கை.காம். இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வெளியிட்ட அவ்விதழுக்கு மனமார்ந்த நன்றி. கும்பகோணம் என்றால் கோயில்கள். காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக கும்பகோணத்தைக் கோயில் மாநகரம் என்று கூறுவர். ஆண்டுக்கொரு முறை வருவது மாசி மகம். குறிஞ்சி மலர் பூப்பது 12 ஆண்டுக்கொரு முறை. அதுபோல பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை வருவது மகாமகம். குறிஞ்சி மலர் பூத்ததை பார்த்த அனுபவம் எனக்கு இல்லை. ஆனால் முதன்முதலாக நான் பார்த்த மகாமகத்தை என்னால் மறக்க முடியாது. இதுவரை மூன்று மகாமகங்களை நான் பார்த்துள்ளேன். 1980 மகாமகம் 1980இல் கும்பகோணத்திற்கு மகாமகத்திற்கு என் பெற்றோர் சென்றுவந்து அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் முதன்முதலாக மகாமகத்தைப் பற்றி அறிந்தேன். 1992 மகாமகம் நான் ஆவலோடு விசாரித்த கும்பகோணத்திற்கே திருமணம் ஆகிவருவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன் கோயில்களுக்கு அதிகம் சென்றதில்லை. புகுந்த இடம் கும்பகோணம் ஆகிவிட்ட நிலையில் வீட்...