ஜாலம் காட்டும் ஜலகண்டேஸ்வரர் கோயில் : தினமணி

இன்றைய (2 செப்டம்பர் 2016) நாளிட்ட தினமணியில் வெளியான கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். எனது கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றி. வேலூர் என்றால் நமக்கு கோட்டையும் அதன் மதில்களும் நினைவுக்கு வரும். முன்பொரு முறை சுற்றுலா சென்றபோது கோட்டையின் மதிலை மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இரவு அதிக நேரமாகிவிட்டதால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அண்மையில் கோட்டையின் உள்ளே உள்ள கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெருமை இக்கோட்டைக்குள்ளது. இக் கோட்டைக்குள் கோயில் அமைந்துள்ளது. அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தெற்குப் புறத்தில் தண்ணீர் காணப்படவில்லை. கோட்டையின் மதில்களும் அகழியும் பார்க்க அழகாக உள்ளன. வேலூர் கோட்டையைப் போல இக்கோயில் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்டதாகவும், விஜயநகர கட்டிடப்பாணியின் இறுதி வடிவில் அமைந்துள்ளதாகவும் அங்குள்ள கல்வெட்டுக் குறிப்பின் மூலமாக அறியமுடிந்தது. தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தின் ...