வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயில்

2013 புத்தாண்டை முன்னிட்டு மந்த்ராலயம் மற்றும் ஹம்பிக்கு குடும்பத்துடன் சென்றுவந்த அனுபவம் தினமணியில் கட்டுரையாக வெளிவந்தது. அக்கட்டுரையைப் பார்த்ததும் தொடர்ந்து கோயில்களுக்குச் செல்லும்போது பெற்ற அனுபவங்களை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வகையில் அவ்வப்போது சென்ற இடங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அவ்வகையில் எங்களது வட இந்தியப்பயணம், உவரிக்கோயில், நல்லிக்கோயில் போன்ற இடங்களுக்குச் சென்ற அனுபவங்கள் கட்டுரைகளாக வெளிவந்தன. இவை தவிர வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் வெளியானது. இக்கட்டுரைகளை தனியாக வலைப்பூ தொடங்கி அவற்றில் பதிய விரும்பி 2016 மகாமக ஆண்டில் (பிப்ரவரி 13-22 மகாமக நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில்) எழுத ஆரம்பிக்கிறேன். வலைப்பூவில் முதல் பதிவாக நாங்கள் வேதாரண்யம் கோயிலுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன் வேதாரண்யத்திலுள்ள கோயில்களுக்கு நானும் என் கணவரும் சென்றோம். வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு சித்திரவேலு எங்களை வேதாரண்யம், அகத்தியான்பள்ளி, கோடியக்க...