Posts

மந்த்ராலயமும் ஹம்பியும்

Image
தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்திற்குக் குடும்பத்துடன் சென்று வரும் என் அத்தை பேரன் இந்த ஆண்டு பயணத்தின்போது உடன் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு எங்களைக் கேட்டபோது மந்த்ராலயம் செல்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்தோம். எங்களது குழுவில் 25 பேர் குடும்ப உறுப்பினர்கள் சென்றோம். தஞ்சாவூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை மெயிலில் மந்த்ராயலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். அங்கிருந்து மூன்று வேன்கள் மூலம் மந்த்ராலயம் சென்று சேர்ந்தோம். முதல்நாள்-மந்த்ராலயம்:  ராகவேந்திரர் சமாதியைத் சுற்றி வந்து வழிபட்டோம். வெளியில் வந்து சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தோம். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர். எங்களுக்குத் திரும்ப மனம் வரவில்லை. இரவு அங்கு நடந்த அன்னதானத்தில் பங்குகொண்டு உணவு அருந்தினோம். தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு அவர்கள் அன்னம் பாலிக்கும் விதம் மனதைத் தொட்டது. சுறுசுறுப்பாகப் பணியாற்றும் மந்திராலயப் பணியாளர்கள், நேர்த்தியாக அன்னமிடப்படும் முறை, வரிசையாக பக்தர்கள் அமைதி காத்து அ...

அக்காவும் மச்சானும்

Image
எங்கள் வீட்டில் பெரிய அக்காவை (திருமதி க.வாசுமதி-திரு கனகராஜ்) சேர்த்து உடன் பிறந்தோர் நாங்கள் 10 பேர்.  இப்போது 70 வயதுக்கு மேல் ஆனபோதிலும் இன்று வரை அவரால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை, நம்மால் முடிந்த அளவு செய்வோம் என்பார்கள்.  அக்கா, மச்சான்   பள்ளிப்படிப்பை அவராகவே நிறுத்திவிட்டு, வீட்டில் தம்பி, தங்கைகளை கவனித்துக்கொண்டதோடு, அம்மாவுக்கு உதவியாக இருந்தார். வீட்டு வேலைகளைக் கற்றுக்கொண்டார். அம்மாவையோ, தங்கைகளையோ எந்த வேலையும் செய்யவிடமாட்டார். வீட்டு வேலை, சமையல் வேலை, தம்பி தங்கைகளை கவனிப்பது, வீட்டில் உள்ள மாடு கன்றுகளைப் பார்த்துக்கொள்வது என்ற அனைத்தையும் செய்வார். அக்காலத்தில் வாஷிங் மெஷின், மிக்சி கிடையாது. எல்லா வேலைகளையும் கைகளால் தான் செய்யவேண்டும்.   அக்கா அன்பு, பாசம், அக்கறை, கண்டிப்பு, நிதானம் ஆகியவற்றுடன் கோபம் வந்தால் தலையில் கொட்டுவார். எண்ணெய் தேய்த்து குளிக்கவைப்பது, தலையைச் சீவிவிடுவது, சாப்பாடு ஊட்டிவிடுவது, எங்களுக்கு முடியை பாப் கட்டிங் செய்வது, வீட்டிற்குச் யார் சென்றாலும் சாப்பிடவோ, காப்பி, பால் குடிக்கவோ கூறுதல், டயத்த...

நான் பார்த்த கருடசேவை

Image
"கருட சேவை தரிசனம் மங்களகரமானது. மன தைரியம், ஆயுள் வழங்கிடச்செய்வது, சர்ப்ப தோஷங்களை போக்கிட வல்லது. மனப்பயம், நடுக்கம் போன்றவற்றை நீக்கிடும் சக்தி படைத்தது. இவ்வருடம் 92 ஆவது ஆண்டாகும். முதல்முறையாக இவ்வருடத்திலிருந்து 27 கருடசேவை புறப்பாடு நடைபெறவிருப்பதும் கூடுதல் சிறப்பு. மிக கோலாகலமாக நடத்தபெறும் இந்தக் கருடசேவை  வைபவத்தில் தஞ்சையைச் சுற்றியுள்ள 27 பெருமாள் கோயில்கள் பங்கேற்கின்றன. ஜூன் 6ஆம் தேதி  சனிக்கிழமை  அன்று ஹம்ச வாகனத்தில் எழுந்தருளும் திருமங்கையாழவார் முன்னே வர, அவரைத் தொடர்ந்து 27 கோயில் பெருமாள்களும் கருட சேவை காட்சி அளித்தபடி தஞ்சையின் நான்கு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா காண்பார்கள். இந்நிகழ்வை தரிசனம் செய்வது அஸ்வமேத யாக செய்வதற்குச் சமமான பலன் தரவல்லது என்பது பெரியோர் வாக்கு" என்று நாளிதழில் வெளியான கட்டுரை  (தினமணி, வெள்ளிமணி, சுஜாதாமாலி, 5.6.2026) மூலமாக அறிந்தேன். கட்டுரையைப் படித்ததும் கருட சேவையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 6.6.2026இல் நடைபெற்ற கருட சேவையைக் காணச் சென்றேன்.  முதன் முதலில் 15 வருடங்களுக்கு முன்பு இளைய  மக...

இங்க் பாட்டில் நினைவுகள்

Image
'தினமணி' நாளிதழில் சில நாள்களுக்கு முன்பு வெளியான (முனைவர் பா.சக்திவேல், "மனநிலை மாற வேண்டும்", 12.5.2026) கட்டுரையைப் படித்தபோது எனக்கு 1975-76இன் பள்ளிக்கால நினைவுகள் மனதிற்கு வந்தன.  நான் பள்ளியில் படித்தபோது பேனாவில் எழுதியதும், இங்க் வாங்கியதும் மறக்க முடியாத அனுபவங்கள் ஆகும். வீட்டின் அருகிலேயே இங்க் கடை வைத்திருப்பவரின் வீடு இருந்ததால் நானும், சகோதரிகளும் அங்கு தான் இங்க் வாங்க சொல்வோம். அவருடைய வீட்டை இங்க்காரர் வீடு எனக் கூறுவோம். எங்கள் மூர்த்தி அண்ணனின் நண்பரான ராமநாதன் அண்ணனும், அவரின் இரு தங்கைகளான பரமேஸ்வரி அக்காவும், பத்மா அக்காவும் அங்கு  இருப்பார்கள். அவர்கள் யாரிடமாவது இங்க் பாட்டிலைக் கொடுத்து 25 பைசாவுக்குக் கேட்போம்.  பாட்டிலில்  முழுவதுமாக இங்க் நிரப்பித் தருவார்கள்.  சிகப்பு இங்க் ஐந்து பைசா, பத்து பைசா விலை கூடுதலாக இருக்கும். நாங்கள்  கருப்பு, ஊதா, சிகப்பு என மூன்று கலரில் வாங்குவோம். நோட்டில் எழுதும்போது கோடு போடுவதற்கும், தலைப்புகளைத் தெளிவாக எடுத்துகாட்டுவதற்கும் வெவ்வேறு கலரைப் பயன்படுத்துவோம். சில்லரையில் நாங்கள் பாட்டில் கொடுத...

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை : பா.தீனதயாளன்

Image
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,  அவருடைய  திரைப்படங்கள், இயக்குனர்களைப் பற்றி 1952 முதல் 1999 வரை உள்ளவற்றை ஆசிரியர் பா. தீனதயாளன் இந்நூலில்  அழகாகக் கூறியிருக்கிறார். அதிலிருந்து எனக்குப் பிடித்த சிலவற்றைப் பகிர்கிறேன்.   "முதன் முதலாக இசைத்தட்டாக தமிழில் வெளிவந்த முதல் திரைப்பட வசனங்கள் 'பராசக்தி' பட வசனங்களே. 1952ல் திரைக்கு வந்து அறிமுகமாகி முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னரும், 1982லும் சிவாஜி கணேசன்தான் மிக அதிக படத்தில் நடித்த ஒரே கதாநாயகன். 82ல் பதிமூன்று படங்களில் நடித்ததில் இரண்டு வெள்ளி விழாப்படங்கள்.  அவரது மகன் பிரபு அறிமுகமான ஆண்டும் அது தான்." (பக்கங்கள் 9, 10)  "என்னை விட சிறந்த  நடிகர் சிவாஜி கணேசன் என்று சேலத்தில் நடைபெற்ற 'நம் நாடு' என்ற தனது படத்தின் நூறாவது நாள் விழாவில் எம்,ஜி. ஆர். பாராட்டினார்." (பக்கம் 11)  "பிற கலைஞர்களுக்கு சிவாஜி கணேசன் பலமாக இருந்திருக்கிறார். (பக்கம் 12)   "வீட்டின் வறுமையைப் போக்க சம்பாதிக்கும் ஆசையும் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கும் ஆசையும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது போல் ...

நான் நாகேஷ் : எஸ்.சந்திரமௌலி

Image
நான் நாகேஷ் என்ற தலைப்பில் உள்ள நூல் சிரித்து வாழவேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் தொடராக வெளிவந்ததாகும்.  நாகேஷ், சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கிளார்க் வேலை கிடைத்தது. அங்கேதான் நாடக ஆசை துளிர்விட்டது. 1959ஆம்ஆண்டு முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் தாமரைக்குளம் படத்தின் மூலமாகச் சினிமாவில் அறிமுகமானார். கே. பாலசந்தரின் தொடர்பு ஏற்பட்டு, நாகேஷுக்கென்றே கேரக்டர்களை உருவாக்கி, நாடகங்கள் எழுத, அவை அனைத்தும் தமிழ் மக்களிடம் அபாரமான வரவேற்பினைப் பெற்றன. அவர் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்கிறார் பிலிம் நியூஸ் ஆனந்தன். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.  தமிழ்திரையுலகில் இரு பெரும் இமயங்களாக விளங்கிய   எம். ஜி. ஆர், சிவாஜி, இருவருடனும் தொடர்ந்து ஏராளமான படங்கள் நடித்த பெருமை நாகேஷுக்கு உண்டு. இருவர் மட்டுமின்றி ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித், ஆகியோர் வரை தலைமுறைகள் கண்டவர் நாகேஷ். அவர் டான்ஸ் ...

வாழ்த்துகள், சென்னை பேஷன் இன்ஸ்டிட்யூட்

Image
'ராணி' என்று நாங்கள் அழைக்கும் திருமதி ச, செல்வராணி சரவணன் (என் அண்ணன் திரு.  ராமமூர்த்தி-அண்ணி திருமதி. ரா.கண்மணியின் மகள்), தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று சென்னை பேஷன் இன்ஸ்டிட்யூட் (அலைபேசி 98848 61088) என்னும் நிறுவனத்தைக்  சுமார் 12 வருடங்களாக நடத்திவருகிறார்.  அதில் மகளிர்க்கான ஃபேஷன் டிசைனிங், டைலரிங், எம்பிராய்டரி, ஆரி ஒர்க்,  உல்லன் நூலில் துண்டு, நிலைத்திரை, குழந்தைகளுக்கான ஸ்வட்டர், தொப்பி, சாக்ஸ், பொம்மை, மண்ணாலான தோடு, ஜிமிக்கி, வளையல்,  சாக்லேட் தயாரிப்பு, பெயிண்டிங், போன்ற  பல  வகையான  கைத்தொழில்களை கற்றுத்தருகிறார். அத்துடன்  சுலபமாக மடிப்பு வைத்து புடவையை நேர்த்தியாக கட்டுவதற்கும் சொல்லித் தருகிறார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்படும் Vocational Diploma in Fashion Designing and Garment Making தேர்வில்  100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  பரீட்சை எழுதினர்.  இதில் முதல் மூன்று இடத்தை சென்னை ஃபேஷன் இன்ஸ்டிட்யூட்டில் பயின்ற மாணவிகள் 25.9.2025இல்  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய ...

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் : விந்தன்

Image
1971இல் தினமணி கதிரில் நடிகவேள் எம்.ஆர்.இராதாவைப் பேட்டிக் கண்டு  அமரர் விந்தனால்  எழுதப்பட்ட தொடரின் நூல் வடிவம். கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் இந்நூல் உள்ளது. அவரிடம் கேட்கும்  கேள்விக்கு  பதில்கள்   மனதில் தோன்றியதை கூறியிருக்கிறார். படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கான பதில்களும் எனக்குப் பிடித்திருந்தது. அதில் சில.... ".....கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி?.......கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது.......வீட்டிலேயே சோறில்லை டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான்  நல்ல சோறு கிடைக்கும்."  (பக்கம் 11)  "உண்மையான கலைஞன் எப்படிப்பட்டவனாக  இருக்கவேண்டும்?......... ஆடியன்ஸக்கு லஞ்சம் கொடுப்பவனாய் இருக்கக் கூடாது: அறிவைக் கொடுப்பவனாயிருக்கவேண்டும்....விளம்பரம் கலைஞனைத் தேடி வந்தது அந்தக் காலம் கலைஞன் விளம்பரத்தை தேடி ஒடறது இந்தக் காலம்." (ப.12)    "எலெக்ட்ரிஷினாக...

பாஸ்கர் அண்ணன்

Image
எனது பெரியப்பாவின் (திரு. தில்லையப்ப நாடார்-திருமதி. தி. மீனம்மாள் அவர்களின்) இளைய மகன் திரு பாஸ்கர்  அவர்கள் 31.8.2025 அன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார். அந்தச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். குடும்பத்தாருடன் சென்னை சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன்.  புகைப்படம் நன்றி: பா.சங்கர் முகநூல் பக்கம் பாஸ்கர் அண்ணன், எங்கள் வீட்டில் ஒருவராக வளர்ந்தவர். பழகுவதற்கு இனிமையாகவும், எளிமையாகவும், பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பார். உழைப்பில் நேர்மை, விட்டுக்கொடுத்தல், பொய் கூறாமை ஆகிய நல்ல குணங்களை அவரிடம் நான் கண்டுள்ளேன். பணம் தொடர்பான விஷயத்தில் மிகவும் கவனமாகவும்  இருப்பார். மிகச்சிறந்த உழைப்பாளி. உற்றார் உறவினர்கள் மீதும், நண்பர்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார். அவர், தஞ்சாவூரிலுள்ள தன்னுடைய சித்தாப்பாவின்  (என்னுடைய அப்பா) அலுமினியக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து புதுக்கோட்டையில் உள்ள அலுமினிய ரோலிங் மில்லில் சேர்ந்து அங்குப் பணியாற்றினார். சில  வருடங்களுக்குப் பிறகு அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது...

பாவை விளக்கு : அகிலன்

Image
அகிலன் எழுதிய பாவை விளக்கு நூலினைப் படித்தேன். அவர் நான்கு பெண்களை மையமாக வைத்து இந்நாவலை எமுதியிருக்கிறார். கதையின் நாயகன் தணிகாசலம். நாயகன்மீது ஆசைப்படும் வயதில் மூத்தவளான தேவகி, நாயகன் ஆசைப்படும் நாட்டியக்கலைஞர் செங்கமலம், நாயகனுக்கு மனைவியாகும் அத்தை மகள் கௌரி, அவனுடைய எழுத்துக்குத் துணை நிற்கும் உமா ஆகிய நான்கு பெண் பாத்திரங்கள். இந்நால்வரையும் நூலசிரியர் குறைவில்லாமல்  வடிவமைத்திருப்பார். நிறைவாக இரண்டாவது மனைவியாக, உமாவை திருமணம் செய்துகொள்வார் கதாநாயகன்.   படிப்பதற்கு எளிமையாகவும், வாக்கிய அமைப்புகள் புரியும்படியாகவும் உள்ளன. இது, திரு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து அதே பெயரில் திரைப்படமாக வெளியானது. நூலைப் படித்து முடித்ததும் தொலைக்காட்சியில் திரைப்படத்தைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. நூலின் சில பகுதிகள் என் மனதில் பதிந்தன. அவற்றைக் காண்போம்.   "தூய வாழ்க்கை என்றால் பெண்களின் நினைவில்லாத  வாழ்க்கை   "பணம் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான சாதனந்தான்......பணமில்லாத வாழ்க்கை எவ்வளவு கேவலமான வாழ்க்கை..." (பக்கம்.7...

தலைமுறைகள் ரசிக்கும் நடிகர் திலகம்

Image
நான்  சிறு வயதில் அண்ணன்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த  திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் ராஜபார்ட் ரங்கதுரை, வசந்த மாளிகை, பாலும் பழமும் இப்படியாக  பலப் படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.  அவருடைய படமும்,  பாடல்களும்   என்றுமே மறக்கமுடியாதவை,  என்னுடைய திருமணத்திற்குப் பின்பு கும்பகோணத்தில், மாமியார் வீட்டில் அனைவரும் சிவாஜி ரசிகர்கள். அதிகமாக சிவாஜி திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.  புகைப்படம் நன்றி : மாலை மலர் எங்கள் மாமியார் வீட்டிற்குப் பெரிய அண்ணன் மகன் ராஜு வந்தபொழுது அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் குடியிருப்பவர்களுடன்  பாசமலர் படத்திற்குச் சென்றோம். அவன் அந்தப்படத்தில் வரும் காட்சிகளையைப் பார்த்து தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். நான், அவனிடம் இது உண்மையில்லையப்பா என்று சமாதானம் செய்தேன். அவனுடைய சிறு வயது  பாசத்தை அப்போது பார்த்தேன். இப்பொமுதும்கூட பாசமலர் படம் பார்க்கும்போது அண்ணன் மகன் ஞாபகம் வந்துவிடும்.  நான் மாமியார், கொழுந்தனார், எங்கள் மாமா மகன் கர்ணன் மச்சான், விஜயா அக்கா ஆகியோருட...

தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் வெட்டுக்குதிரை வாகன விழா

Image
இன்று, தஞ்சாவூர், கீழ வாசல், அருள்மிகு வெள்ளை விநாயகருக்கு தஞ்சாவூர், நாடார் உறவின்முறை தர்ம பரிபாலன சங்கத்தால் நடத்தப்படுகின்ற 99ஆவது ஆண்டு வெட்டுக்கு திரை வாகன புஷ்ப விமான உற்சவத் திருவிழாவில் உறவினர்களுடன் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றேன். இவ்விழாவை நாடார் இனத்தவர்கள் வருடாவருடம் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இவ்விழாவின்போது பகல் 12 மணிக்கு வெள்ளை விநாயகருக்கு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு மலர், நகை அலங்காரமும், தீபாராதனையும், நாதஸ்வரம் கச்சேரியுடன் நடைபெற்றது. பின்பு விழாவிற்கு வந்த அனைவருக்கும் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, சுண்டல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இக்கோயிலுக்கு நான் இளம் வயதில் அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா, தங்கைளுடன் சென்றுள்ளேன். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் சென்றுள்ளேன். திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள், போன்ற நாள்களிலும், விசேஷ நாள்களிலும் செல்கிறேன். ஏதாவது பொருட்கள் தொலைந்தால் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும், உடம்பு சரியில்லையென்றாலும் இவ்விநாயகரை நினைத்து வேண்டிக் கொண்டால் உ...