வாழ்த்துகள், சென்னை பேஷன் இன்ஸ்டிட்யூட்
'ராணி' என்று நாங்கள் அழைக்கும் திருமதி ச, செல்வராணி சரவணன் (என் அண்ணன் திரு. ராமமூர்த்தி-அண்ணி திருமதி. ரா.கண்மணியின் மகள்), தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று சென்னை பேஷன் இன்ஸ்டிட்யூட் (அலைபேசி 98848 61088) என்னும் நிறுவனத்தைக் சுமார் 12 வருடங்களாக நடத்திவருகிறார். அதில் மகளிர்க்கான ஃபேஷன் டிசைனிங், டைலரிங், எம்பிராய்டரி, ஆரி ஒர்க், உல்லன் நூலில் துண்டு, நிலைத்திரை, குழந்தைகளுக்கான ஸ்வட்டர், தொப்பி, சாக்ஸ், பொம்மை, மண்ணாலான தோடு, ஜிமிக்கி, வளையல், சாக்லேட் தயாரிப்பு, பெயிண்டிங், போன்ற பல வகையான கைத்தொழில்களை கற்றுத்தருகிறார். அத்துடன் சுலபமாக மடிப்பு வைத்து புடவையை நேர்த்தியாக கட்டுவதற்கும் சொல்லித் தருகிறார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் கீழ் நடத்தப்படும் Vocational Diploma in Fashion Designing and Garment Making தேர்வில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பரீட்சை எழுதினர். இதில் முதல் மூன்று இடத்தை சென்னை ஃபேஷன் இன்ஸ்டிட்யூட்டில் பயின்ற மாணவிகள் 25.9.2025இல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய 16ஆவது பட்டமளிப்பு விழாவில் பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளனர்.
விடுமுறை நாட்களில் மாணவிகளுக்கு இலவச சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இங்கு 10,000க்கு மேற்பட்டோர் பயிற்சிபெற்று பலன் அடைந்துள்ளனர்.
இவ்வகுப்பில் பயிற்சி பெற்றவர்களில் சிலர் தனியாக நிறுவனம் வைத்து நடத்தி வரும் அளவு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பபிடத்தக்கது.
திருமதி. செல்வராணி மகளிர் கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளராகச் சென்றுள்ளார். சென்னை வானொலி நிலைய விவித்பாரதியில் அவருடைய பேட்டி வந்திருக்கிறது. அவள் விகடன் இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி வந்துள்ளது.
ராணியின் முயற்சி மேலும் சிறக்கவும் அந்நிறுவனம் மேலும் வளரவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருக்கின்ற அவரது கணவர், மகன், மகள் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புகைப்படங்கள் நன்றி : சென்னை பேஷன் இன்ஸ்டிட்யூட்
ReplyDeleteஅத்தை, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், எங்களுடைய முயற்சியைப் பாராட்டி இவ்வளவு அழகாக எழுதியதற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் ஆசீர்வாதமும் உற்சாகமும் எனக்கு இன்னும் உறுதியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. மிக்க நன்றி 🙏
-