சிறந்த குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி (1931-2026)
திரைப்படநடிகை சௌகார் ஜானகி இன்று இறந்த செய்தியைக் கேட்டேன். அவருக்கு வயது 94. சௌகார் ஜானகி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது எதிர்நீச்சல் திரைப்படமே. அதில் அவர் மாமியாக வருவார். இரு கோடுகள், பாவை விளக்கு, நல்ல இடத்து சம்பந்தம், பார் மகளே பார், புதிய பறவை, நீர்க்குமிழி, உயர்ந்த மனிதன், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, காவியத்தலைவி, தில்லு முல்லு, இப்படியாக அவர் நடித்த படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் கண்டிப்பான, சரியான நேரத்தைக் கடைபிடிக்கும் மனைவியாக நடித்திருப்பார். இரு கோடுகளில் கலெக்டராக வருவார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்திருப்பார். "ஏறத்தாழ 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு வானொலிக்கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இரண்டு நந்தி விருதுகள், கலைமாமணி விருது, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றியதற்காகப் பெயர் பெற்றவர்." (விக்கிப்பீடியா) அவருடைய சிகை அலங்காரம், உடைகள், ...