நான் நாகேஷ் : எஸ்.சந்திரமௌலி

நான் நாகேஷ் என்ற தலைப்பில் உள்ள நூல் சிரித்து வாழவேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் தொடராக வெளிவந்ததாகும். 


நாகேஷ், சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கிளார்க் வேலை கிடைத்தது. அங்கேதான் நாடக ஆசை துளிர்விட்டது. 1959ஆம்ஆண்டு முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் தாமரைக்குளம் படத்தின் மூலமாகச் சினிமாவில் அறிமுகமானார். கே. பாலசந்தரின் தொடர்பு ஏற்பட்டு, நாகேஷுக்கென்றே கேரக்டர்களை உருவாக்கி, நாடகங்கள் எழுத, அவை அனைத்தும் தமிழ் மக்களிடம் அபாரமான வரவேற்பினைப் பெற்றன.

அவர் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்கிறார் பிலிம் நியூஸ் ஆனந்தன். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். 

தமிழ்திரையுலகில் இரு பெரும் இமயங்களாக விளங்கிய   எம். ஜி. ஆர், சிவாஜி, இருவருடனும் தொடர்ந்து ஏராளமான படங்கள் நடித்த பெருமை நாகேஷுக்கு உண்டு. இருவர் மட்டுமின்றி ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித், ஆகியோர் வரை தலைமுறைகள் கண்டவர் நாகேஷ்.

அவர் டான்ஸ் முறைப்படி கற்றுக் கொள்ளவில்லையாம். அவர் பெயரில் சினிமா தியேட்டர் உண்டு. அவர் நகைச்சுவையாகப் பேசும் வசனங்கள் இயல்பாகவே வந்துவிடுமாம். அவர் தனது திருமணத்தை ஆயிரம் ரூபாயில் எளிமையாக நடத்தியிருக்கிறார்.

இந்நூலைப் படித்தபோது நாகேஷின் சில படங்கள் நினைவிற்கு வந்தன. அவர் சோ, மனோரமா, சச்சு, ஜெயந்தி, போன்ற பல நடிகர்களுடன், நடிகைகளுடன் நடித்ததை நான் ரசித்ததுண்டு. 

அவரது படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், பாமா விஜயம், பத்தாம்பசலி, நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், ஊட்டி வரை உறவு, அன்பே வா, எங்க வீட்டுப்பிள்ளை, வசந்த மாளிகை, என்று பட்டியல் போய்க்கொண்டே இருக்கும்.

பாலசந்தர் மூலமாக அறிமுகமான இவரை வைத்து பல இயக்குநர்கள் படம் எடுத்துள்ளனர். அவரது டான்ஸ், பெரியவர் முதல், சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அவருடைய நகைச்சுவை என்றும் மக்கள் மனதில் நிற்கும். பல தலைமுறைகளைக் கண்ட நடிகர் நாகேஷின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

நூலைப் பற்றிய குறிப்பு : 
நான் நாகேஷ், எஸ்.சந்திரமௌலி, கிழக்கு, முதல் பதிப்பு, அக்டோபர் 2010, ரூ.175

Comments

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

வாழ்த்துகள், சென்னை பேஷன் இன்ஸ்டிட்யூட்