Posts

Showing posts from May, 2026

இங்க் பாட்டில் நினைவுகள்

Image
'தினமணி' நாளிதழில் சில நாள்களுக்கு முன்பு வெளியான (முனைவர் பா.சக்திவேல், "மனநிலை மாற வேண்டும்", 12.5.2026) கட்டுரையைப் படித்தபோது எனக்கு 1975-76இன் பள்ளிக்கால நினைவுகள் மனதிற்கு வந்தன.  நான் பள்ளியில் படித்தபோது பேனாவில் எழுதியதும், இங்க் வாங்கியதும் மறக்க முடியாத அனுபவங்கள் ஆகும். வீட்டின் அருகிலேயே இங்க் கடை வைத்திருப்பவரின் வீடு இருந்ததால் நானும், சகோதரிகளும் அங்கு தான் இங்க் வாங்க சொல்வோம். அவருடைய வீட்டை இங்க்காரர் வீடு எனக் கூறுவோம். எங்கள் மூர்த்தி அண்ணனின் நண்பரான ராமநாதன் அண்ணனும், அவரின் இரு தங்கைகளான பரமேஸ்வரி அக்காவும், பத்மா அக்காவும் அங்கு  இருப்பார்கள். அவர்கள் யாரிடமாவது இங்க் பாட்டிலைக் கொடுத்து 25 பைசாவுக்குக் கேட்போம்.  பாட்டிலில்  முழுவதுமாக இங்க் நிரப்பித் தருவார்கள்.  சிகப்பு இங்க் ஐந்து பைசா, பத்து பைசா விலை கூடுதலாக இருக்கும். நாங்கள்  கருப்பு, ஊதா, சிகப்பு என மூன்று கலரில் வாங்குவோம். நோட்டில் எழுதும்போது கோடு போடுவதற்கும், தலைப்புகளைத் தெளிவாக எடுத்துகாட்டுவதற்கும் வெவ்வேறு கலரைப் பயன்படுத்துவோம். சில்லரையில் நாங்கள் பாட்டில் கொடுத...