Posts

Showing posts from August, 2026

சிறந்த குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி (1931-2026)

Image
திரைப்படநடிகை சௌகார் ஜானகி இன்று இறந்த செய்தியைக் கேட்டேன். அவருக்கு வயது 94.  சௌகார் ஜானகி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது எதிர்நீச்சல் திரைப்படமே. அதில் அவர் மாமியாக வருவார். இரு கோடுகள், பாவை விளக்கு, நல்ல இடத்து சம்பந்தம், பார் மகளே பார், புதிய பறவை, நீர்க்குமிழி, உயர்ந்த மனிதன், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, காவியத்தலைவி, தில்லு முல்லு, இப்படியாக அவர் நடித்த படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் கண்டிப்பான, சரியான நேரத்தைக் கடைபிடிக்கும் மனைவியாக நடித்திருப்பார். இரு கோடுகளில் கலெக்டராக வருவார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்திருப்பார்.  "ஏறத்தாழ 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு வானொலிக்கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இரண்டு நந்தி விருதுகள், கலைமாமணி விருது, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றியதற்காகப் பெயர் பெற்றவர்." (விக்கிப்பீடியா) அவருடைய சிகை அலங்காரம், உடைகள், ...

ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் (1954-2026)

Image
ஞானியார் முனைவர் வீ.ஜெயபால்  அவர்கள் நேற்று (9.8.2026) இயற்கையெய்திய செய்தியை அறிந்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக அவர் எங்களுடைய குடும்ப நண்பர்.  அவர் எழுதியுள்ள "வேலவர் வெற்றி வெண்பா" என்ற நூலின் வெளியீட்டுவிழா தஞ்சாவூரில் நடைபெற இருந்தது. நானும் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக என் கணவரிடம் கூறினேன். அவரிடம் எத்தனை மணிக்கு வரவேண்டும் என போன் போட்டுக் கேட்கச் சொன்னேன். அவருடைய நம்பரில் அழைத்ததும் அவருடைய மனைவி எடுத்து அவருக்கு முடியவில்லை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள் என அழுதுகொண்டு பேசினார்களாம். நாங்கள் பார்ப்பதற்குக் கிளம்பியபோது நண்பர் ஒருவர் சார் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கூறினார். பிறகு நாங்கள் இருவரும் வீட்டிற்குச் சென்றோம். தெருவாசிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அங்கு இருந்தனர். அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து சைவ சித்தாந்த நண்பர்கள் அனைவரும் முறைப்படி தேவாரப்பாடல்களைப்பாடினார்கள். 10 நாள்களுக்கு முன்புதான் அவருடைய மேற்கண்ட நூல் வெளியீடு தொடர்பாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். தன் உடலை கவனிப்பதை விட ச...