நான் நாகேஷ் : எஸ்.சந்திரமௌலி
நான் நாகேஷ் என்ற தலைப்பில் உள்ள நூல் சிரித்து வாழவேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் தொடராக வெளிவந்ததாகும். நாகேஷ், சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கிளார்க் வேலை கிடைத்தது. அங்கேதான் நாடக ஆசை துளிர்விட்டது. 1959ஆம்ஆண்டு முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் தாமரைக்குளம் படத்தின் மூலமாகச் சினிமாவில் அறிமுகமானார். கே. பாலசந்தரின் தொடர்பு ஏற்பட்டு, நாகேஷுக்கென்றே கேரக்டர்களை உருவாக்கி, நாடகங்கள் எழுத, அவை அனைத்தும் தமிழ் மக்களிடம் அபாரமான வரவேற்பினைப் பெற்றன. அவர் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்கிறார் பிலிம் நியூஸ் ஆனந்தன். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். தமிழ்திரையுலகில் இரு பெரும் இமயங்களாக விளங்கிய எம். ஜி. ஆர், சிவாஜி, இருவருடனும் தொடர்ந்து ஏராளமான படங்கள் நடித்த பெருமை நாகேஷுக்கு உண்டு. இருவர் மட்டுமின்றி ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித், ஆகியோர் வரை தலைமுறைகள் கண்டவர் நாகேஷ். அவர் டான்ஸ் ...