மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளி : 1-5ஆம் வகுப்பு
அப்போதெல்லாம் ஐந்து வயது முடிந்ததும் ஆறாம் வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள் . அதனை “ பேர் சேர்க்க ப் போகிறோம் ” என்பார்கள் . தற்போது இதனை அட்மிசன் என்கிறோம் . என் ஆறாம் வயதில் அம்மா என்னை மக்கள் ஊழிய சங்க நடுநிலைப்பள்ளிக்கு பேர் சேர்க்க (1970-71) அழைத்துச் சென்றார்கள் . தலைமை ஆசிரியர் கேட்க , அம்மா என் பெயரையும் , வயதையும் கூறினார்கள் . அம்மா என்னை பேர் சேர்த்துவிட்டு வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு , “ மதியம் அக்காவுடன் வா ” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள் . என் அக்கா அந்தப் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தார் . சிறிது நேரம் கழித்து நான் “ அம்மா ”’ என்று அழாமல் “ பொம்மி , பொம்மி ” என்று அழ ஆரம்பித்துவிட்டேன் , வகுப்பு ஆசிரியர் என்னிடம் , “ பொம்மி என்றால் யார் ?’ எனக் கேட்க , “ பொம்மி என்றால் என் அக்கா ” என்று கூறாமல் திரும்பத்திரும்ப “ பொம்மி ” என்று கூறிக்கொண்டிருந்தேன் . உடனே ஆசிரியர் பெரிய வகுப்பில் படிக்கும் மாணவிகளுடன் என்னை அனுப்பி அக்காவிடம் விட்டுவிட்டு வரச்சொன்னார்கள் , அவர்களுடன் சென்றேன் . ஒவ்வொரு வகுப்பாகக் காண்பித்து கேட்டார்கள் . கீழே உள்ள வகுப்பறைகளில்