குற்றப்பரம்பரை : வேல ராமமூர்த்தி

நான் அண்மையில் படித்த, வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை (டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, 2016) நூலிலிருந்து எனக்குப் பிடித்தவற்றைப் பகிர்கிறேன்.

கொம்பூதி கிராமத்துக் கள்ளர்களின் வாழ்க்கைதான் இந்நாவலின் கருவாகும். உலகம் முழுவதும் கள்ளர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் கள்ளர் இன மக்களின் தலைவரான வேயன்னாவும் அவரது தாய் கூழானிக் கிழவியும் மறக்கமுடியாத பாத்திரங்களாய் செலுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கதையில் வேயன்னாவின் கூட்டம், மகன் சேதுவிடம் செய்து கொடுத்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு களவை நிறுத்தி விடுகிறார்கள். கள்ளர்கள் கொள்ளையிடும் வீட்டின் அமைப்பை ஆக்காட்டிக் குருவியின் துணையோடு அறிவதும் கன்னக்கோலிட்டுத் திருடுவதும் விலைமதிப்பற்ற பொருட்களைக் கூட கொள்ளையடிக்கப்பட்டு வந்த பின் அவற்றின் அருமை தெரியாமலேயே பச்சமுத்து போன்ற பணிவுமிக்க அயோக்கியர்களிடம் தாரை வார்ப்பதும் உண்மையில் வாழ்ந்த ஒரு வாழ்க்கைப் பதிவுதான்”, என்கிறார் எஸ். . பெருமாள்.

இதில்வரும் பாத்திரங்களில் எனக்கு பிடித்தவர்கள் வேயன்னா, அவனுடைய மனைவி அங்கம்மா, வேயன்னாவின் அம்மா கூழானிக்கிழவி, அவர்களின் மகள் அன்னமயில், இரு மகன்கள் வில்லாயுதம், சேது. மற்றும் வையத்துரை, சிட்டு,  காளத்தி,  ராக்கு, வீரணன், நாகமுனி, ஹஸார் தினார், வஜ்ராயினி, வில்லாயுதம் ஆகியோர். நாம் படிக்கும் போதே எதுக்கும் ஆசைப்படாமலும் தனக்கென்று எதுவும் சேர்த்துவைத்துக் கொள்ளாமலும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவராகவும் வேயன்னா இருக்கிறார். அவரை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.     

எட்டையாபுரம் சமஸ்தானத்திலே ஒரு தடை இருந்தது. சமஸ்தானத்துக் குட்பட்ட குடியான சனங்கள் ஒன்னு...ரெண்டு...மூனுன்னு எண்ணுகிறபோது எட்டுஎண்கிற எண்ணை மட்டும் உச்சரிக்கக்கூடாது.” (.81) ஏழுக்கப்புறம் எட்டு என்று எண்ணாமல் ராசா ஒன்பது, பத்துன்னு எண்ணிக் கொண்டே போகிறார்கள். அதற்கான காரணம் ராஜாவின் பெயர் எட்டப்பா ராசா என்பதால் அந்த எண்ணை உச்சரிக்க மாட்டார்கள். குடியானவர்கள் வாயால் சொல்வதை ராசாவுக்கு அவமரியாதையாக அவர்கள் நினைக்கிறார்கள்.

          அதே போல் வேறு பழக்கம் இருந்ததையும் அறியமுடிந்தது. “”ராமநாதபுரம் சமஸ்தானத்திலே உள்ள குடியான சனங்களுக்கு ஒரு தடை இருந்தது. அறுவடை காலத்திலே அம்பாரம் அம்பாரமா நெல்லு, கம்பு, சோளம், விளைஞ்சாலும் பெரிய மரக்கால்படி, நாழிப்படியாலே அளக்கக்கூடாது. சின்ன மரக்கால், நாழியாலே தான் தானியங்களை அளந்து மூட்டை கட்டணும். பெரிய மரக்காலும் நாழியும் சேதுபதி அரண்மனையிலேயே மட்டும் தான் இருக்கணும்.”  ஒரு நாள் சேதுபதி மகாராஜா வேட்டையாட குதிரையில் காட்டுக்கு போனாரு துணைக்கு கிச்சிலப்பன் நாயக்கன் போனான் வேட்டையாடி திரிந்த போது  தடுமாறி  ஒரு பெருப்பள்ளத்திலே சேது பதி குதிரைதடுமாறி  விழபோக கிச்லிப்பன் லாவகமாக காப்பத்திட்டான் சேதுபதிக்கு சந்தோஷம் அவனிடம் ஏதாவது கேள் என்றார்  பிரபோ தங்கள் கருணையால் எந்த குறையும் இல்லை சமஸ்தானத்துகுடியான சனங்கள்  அறுவடைக் காலங்களில் தானியங்களை அளக்க சிரமப்படுகிறார்கள். பெரியநாழிக் கொண்டு அள்ளவும், அளக்கவும் தாங்கள் உத்தாடம் வேண்டும். என்றான் அப்படியே ஆகட்டும் என்றார் இந்த இடத்துக்கு பெருநாழி எனப் பெயர் வழங்க அனுமதி வேண்டும் என்றான். (.82,83)

           அய்யாமார், முதலாளிமார்கள் பெருநாழியில் வீட்டுக்கொரு   பாடுகாப்பான் உண்டு பாடுகாப்பானெல்லாம் பெரும்பச்சேரிக்காரர்கள் தான்  காட்டுவேலை, களத்துவேளை,  கல்யாணம், சடங்கு, வேலையிலிருந்து இழவு சொல்லிப் போய், எரியூட்டித் திரும்புவது வரை எடுபிடி வேலையெல்லாம் பாடுகாப்பான் பொறுப்பு.(. 35)

          வேயன்னா கூட்டத்தார் பெருநாழியின்  பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்வு சற்று வித்தியாசமாக இருக்கும். இரவு நேரங்களில் அனைவரும் ஒன்று கூடி திருட்டுத் தொழிலுக்குக் கிளம்பும்போது வேயன்னாவின் அம்மாதான்  வழியனுப்புவாள். அவர்கள் தோளில் வைத்திருக்கும் ஆக்காட்டிக் குருவி சொல்லும் திசையை நோக்கி செல்வார்கள். அவர்கள்  வரும் வரை பெண்கள் காத்திருப்பார்கள். அவர்கள் கொண்டு வரும் பொருட்களில் தங்கம் வைரம் இன்னும் பல கற்கள் என இருக்கும்.  அதற்கெல்லாம் ஆசைப்படாமலும், அவற்றைத் தொடாமலும் அப்படியே ஊரில் உள்ளவரிடம் கொடுத்து அதற்கு பதிலாக தானியங்களை வாங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு அது தான் பிழைப்பு.

          திருட்டுத் தொழில் செய்தாலும் மக்களுக்கு உதவி செய்பவர் வேயன்னா. பின்னர் தன் மகனிடம் செய்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அத்தொழிலையே விட்டுவிடுகிறார். அவருடைய கூட்டத்தினரும் அவர் சொற்படி விட்டு விடுகின்றனர்.சாப்பாட்டுக்கே சிரமப்படுகின்றனர். அவர்கள் படும் சிரமத்தைப் பார்த்த அடுத்த ஊரினர் தானியங்களை அனுப்பிவைக்கின்றனர். அதனை அவர் திருப்பி அனுப்பிவிடுகிறார். கஷ்டம் தொடர்கிறது.

          திருட்டுத்தொழிலில் பங்கினைப் பெற்றுவந்த பச்சமுத்து தன் பிழைப்புக்காக இரு ஊர்களுக்கிடையே குழப்பத்தை உண்டாக்குகிறான். அவர்கள் திருட்டுத் தொழிலை விட்டதைப் பயன்படுத்தி பச்சமுத்து வேற்று ஊர்க்காரர்களை அத்தொழிலில் ஈடுபடுத்துகிறான். ஆனால் திருட்டுத்தொழில் ஈடுபட்டது கொம்பூதிக்காரர்கள் என எண்ணி காவல் துறை அதிகாரியான வேயன்னாவின்  மகன் சேது அக்கூட்டத்தினரைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான். இதில் சேராத வேயன்னாவின் மற்றொரு மகன் வில்லாயுதம் மட்டும் தப்பிவிடுகிறான். அவர்கள் இருவரும் பிரியக்கூடாது என்று தன் ஆசையை வெளிப்படுத்தி, கூழானிக்கிழவியும் இறந்துவிடுகிறாள். சாகும்வரை சத்தியத்தைக் காப்பாற்றிவிட்டார் வேயன்னா.

Comments

  1. அருமையான விமர்சனம்
    படித்து மகிழ்ந்த நூல்

    ReplyDelete
  2. விமர்சனம் நூலைப் படக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

பெத்தண்ணன் கலையரங்கம்