Posts

Showing posts from July, 2020

குற்றப்பரம்பரை : வேல ராமமூர்த்தி

Image
நான் அண்மையில் படித்த , வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை (டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, 2016) நூலிலிருந்து எனக்குப் பிடித்தவற்றைப் பகிர்கிறேன் . “ கொம்பூதி கிராமத்துக் கள்ளர்களின் வாழ்க்கைதான் இந்நாவலின் கருவாகும் . உலகம் முழுவதும் கள்ளர்கள் இருந்திருக்கிறார்கள் . இந்தக் கள்ளர் இன மக்களின் தலைவரான வேயன்னாவும் அவரது தாய் கூழானிக் கிழவியும் மறக்கமுடியாத பாத்திரங்களாய் செலுத்தப்பட்டுள்ளனர் . இந்தக் கதையில் வேயன்னாவின் கூட்டம் , மகன் சேதுவிடம் செய்து கொடுத்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு களவை நிறுத்தி விடுகிறார்கள் . கள்ளர்கள் கொள்ளையிடும் வீட்டின் அமைப்பை ஆக்காட்டிக் குருவியின் துணையோடு அறிவதும் கன்னக்கோலிட்டுத் திருடுவதும் விலைமதிப்பற்ற பொருட்களைக் கூட கொள்ளையடிக்கப்பட்டு வந்த பின் அவற்றின் அருமை தெரியாமலேயே பச்சமுத்து போன்ற பணிவுமிக்க அயோக்கியர்களிடம் தாரை வார்ப்பதும் உண்மையில் வாழ்ந்த ஒரு வாழ்க்கைப் பதிவுதான் ”, என்கிறார் எஸ் . ஏ . பெருமாள் . இதில்வரும் பாத்திரங்களில் எனக்கு பிடித்தவர்கள் வேயன்னா , அவனுடைய மனைவி அங்கம்மா , வேயன்னாவின் அம்மா கூழானிக்கிழவி , அவர்களின் மகள் அன்னமயில...